வாசகர்களே இந்த வலைப்பதிவு மூலம் எங்கள் ஊரில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் மற்றும் எங்கள் ஊரை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
வியாழன், 31 டிசம்பர், 2009
குல்பி ice
நம்ம ஊர்ல இருந்து பள்ளிக்கூடம் படிச்சதுல அதிகமான பேர் படிச்சது முட்டம் பள்ளிக்கூடம் அல்லது கணபதிபுரம் பள்ளிகூடம்தான் ஆனாலும் கார்மேல் பள்ளிகூடத்துல படிக்கிறது ஒரு பெருமையா இருந்ததுண்டு. நான் கார்மேல் பள்ளிகூடத்துல நாலு வருசம்தான் படிச்சிருக்கேன். ஏன் கதை எல்லாருக்கும் தெரியும் . நம்மள பல பேரு ஆறு வருஷம் அங்கேயே படிச்சதுண்டு, கடைசி நாள்களில் பசுமை நிறைந்த நினைவுகளே .... பாடல் பாடி இருந்தாலும் நாம மறந்து போன விஷயம் நிறைய உண்டு . நமக்கு பாடம் சொல்லிக்குடுத்த வாத்தியாரு , க்ரௌண்ட சுத்தி ஓடவிட்ட டிரில் வாத்தியாரு , கூட படிச்சநண்பர்கள் , கேட் வாட்ச்மன் எஸ் பீ எம்போரியம் கடை எல்லாம் மறந்து போக வாய்ப்பு உண்டு , ஆனா நாம மறக்காத விசயங்களில் ஒன்னு குல்பி ஐஸ், இது ஏதோ தூள் படத்துல லைலா சொன்னதா நினைக்க வேண்டாம் , இது எங்களுக்கு ரெம்ப பழசு . நீல கலர் கேட் பக்கமா சின்னதா ஒரு தள்ளு வண்டில வச்சு கொண்டு வருற அத சுத்தி அங்க படிச்ச எல்லாரும் ரெகுலர் கஸ்டமர் , குட்டியா இருக்குற அந்த வண்டில உள்ள சின்ன குளிர்சாதன பெட்டில இருந்து எடுத்து தரும்போதே நாக்கில் ஒருமாதிரியான உணர்வு வந்திரும் , வித விதமான கலர்ல அந்த ஐஸ் கிடைக்கும் , என்ன கலர்ல ஐஸ் சாபிட்டானு சாப்பிட்டவன் வாய வச்சு சொல்லிடலாம் , பொதுவா சிவப்பு , பச்சை , அப்புறமா மஞ்சள் கலந்த வெள்ளை கலர்ல ஐஸ் கிடைக்கும் , எல்லாதையும் விட மஞ்சள் கலந்த வெள்ளை நிற ஐஸ் ரெம்ப நல்லா இருக்கும் , அத வெண்ணிலா சுவைன்னு சொல்லுவாங்க, அலுமினியம் வைச்சு மூடி அந்த ஐஸ் கிடைக்கும், அந்த மூடிய களத்துற வரைக்குமான நிமிடங்கள் எங்கள் பொறுமையை வெகுவாக சோதிக்கும். அனாலும் அதற்க்கான காத்திருப்புகள் மிகவும் ரசிக்ககூடிய நினைவுகளாய் உள்ளன , குல்பி ஐஸ் பற்றி சொல்லும்போது அந்த வண்டில வச்சிருக்குற சின்ன கண்ணாடி குப்பில உள்ள பஞ்சி மிட்டாய் மற்றும் பால்கோவா பற்றி சொல்லாம இருக்க முடியாது , பஞ்சும் நெருப்பும் பக்கத்துல்ல இறுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா தண்ணி பட்டா ஒன்னும் இல்லாம போகும் பஞ்சிமிட்டாய் பக்கத்துல குல்பி ஐஸ் விப்பாரு , நண்பர்களோடு கலந்து பேச , பஸ் வரும்வரைலான எங்கள் காத்திருப்புக்கு இந்த குல்பி ஐஸ் சின்ன ஆறுதல் ,பரீட்சை நடக்கும் நாள்களிலும் கிடைக்கும் இந்த ஐஸ் எங்கள் கடுமையான நாள்களின் நண்பன். நம்ம எல்லாருக்கும் பரிச்சயமான இந்த ஐஸ் இப்போ வட மாநிலவர்கள் நாகர்கோயில் பகுதியை சுற்றி விற்பனை செய்கிறார்கள். நண்பர்களே இது உங்கள் நேரம் நீங்களும் குல்பி ஐஸ் உடனான நீண்ட நினைவுகளை இங்கே பதிவு செய்யுங்கள் ........................
வெள்ளி, 20 நவம்பர், 2009
இதயன் வைத்த பூசை
நான் போன வாரம் ஒரு இளம் குருவைத்த பூசையில் பங்கெடுக்க நேர்ந்தது. அவர் பார்பதற்கு மிகவும் சிறுவன் போல் இருந்தார். பூசைநடக்கும் போதே எனக்கு இதயனின் ஞாபகம் வந்தது.
வெளியில் வந்து சிறிது நேரம் பழைய நினைவுகளை அசை போட்டேன்.
அவன் ஒரு போர்வையை பூசை உடுப்பைப்போல உடித்திக்கொண்டு வைக்கும் பூசையை ரசிப்பதே ஒரு நல்ல நேரப்போக்காக இருக்கும். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக...!!! மற்றும் சென்று வாருங்கள் பூசை முடிந்தது ஆகிய வசனங்களை அவன் உச்சரிக்கும் குரல் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
முக்கியமான விஷயம் என்னெவென்றால் , யாரும் சிரிக்காமல் இருக்க வேண்டும். சிரித்தால் அவ்வளவுதான். அவன் பூசையை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்து விடுவான்.
அவன் சிறுவனாக இருக்கும் போதே அவனை பார்த்து வலுத்த மண்டைக்காரன் என்று சொல்வதுண்டு. அதற்கேற்ப அவனும் சிறந்த கல்வி கற்று நல்ல நிலையில் இருப்பது நாமனைவருக்கும் மகிழ்ச்சியே
திங்கள், 26 அக்டோபர், 2009
வெற்றிப் படிகள்
நான் இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போரேன். சமீபமா புன்னைக்காயல் ஊர்ல திருவிழா நடந்து முடிஞ்சுது. திருவிழா நடந்த சமயத்ல ஊர் கமிட்டி மக்கள் அவங்க ஊருக்காக ஒரு இணையதளம் அமைக்கிறதா முடிவு செஞ்சிருக்காங்க. அப்ப அது பதி நிரய மக்கள் கிட்ட அபிப்பிராயம் கேட்டப்ப நிரய பேர் நம்ம ஊர் இணையதளம் பத்தி சொல்லி இருக்காங்க. ஊர்ல உள்ள சிலர் நம்ம இணையதளத்தை பார்த்து அவர்களுக்கும் பிடித்துப்போக அவங்க ஏரியாவில் உள்ள எல்லா இணையதளம் டிசைனிங் கம்பெனிகளை அணுகி நம்ம இணயதளம் மாதிரி பண்ண சொல்லி இருக்கிரார்கள். இந்த விஷயம் எனக்கு தெரிந்த புன்னக்காயல் நண்பர் ஒருவர் எனக்கு ஃபொன் செய்து சொன்னார். அத்துடன் நம் ஊர் இணயதளத்தைப் பற்றியும் நல்ல விதமாக கூரினார். இது நமக்கு கிடைத்த வெற்றியின் படிகளில் ஒன்று..
இப்படிக்கு
ஜுலியன்.
திருட்டு பசங்க
மே ஒண்ணு தொழிலாளர் தினம் (எனக்கு வருஷம் நினைவில் இல்லை). அதற்க்கு முந்திந தினம் நாம அண்ணன் எட்மண்ட் தொழிலாளற்களை வாழ்த்தி நோட்டீஸ் அடித்து கொண்டு வந்திருந்தார். அன்றைக்கு இரவே எல்லா நோட்டீஸையும் ஊர் ஊராக கொண்டு போய் ஒட்ட வேண்டும்.
நாங்கள் இரண்டு அணியாக பிரிந்தோம் ஒரு அணி எட்மண்ட் ஆண்ணன் தலைமையில் அவர் வண்டியில் இன்னொரு அணி ஜெரோம் அண்ணன் தலைமையில் அவர் வண்டியில். நம்ம ஊர்ல இருந்து முட்டம், கடியப்பட்டினம் வழியாக கருங்கல் சென்று அப்படியே நாகர்க்கொவில் போய் அங்கிருந்து ஊர் வந்து சேர்ந்தோம்.
இதற்கிடையில் நிரய சம்பவங்கள் நடந்தது. அதில் சில எனக்கு நினைவிருகிறது. நாங்கள் கணபதிபுரம் வரும்போது ஏற்தாழ இரண்டு மணி இறுக்கும் அப்ப வண்டி சதம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த கோழி ஒண்ணு முழிச்சு ஓடிச்சு நம்ம ஜொசப் உடனே அந்த கோழிய பிடிச்சு பசை கொண்டு போன வாளில போட்டு ஈர துணி வச்சு மூடி பிடிச்சுகிட அப்படியே வண்டிய கல்லுகட்டிக்கு விட்டோம். அங்க நடுக்குளம் சுத்தி உள்ள இடத்துல வெள்ளரிக்கய் பயிர் பண்ணிருந்தாங்க. அதுக்கு முந்தின நாள்தான் நாங்க ஆத்துக்கு குளிக்க போகும்போது அங்கு நின்ன விளைகாரரிடம் சாப்பிட பின்சு வெள்ளரிக்காய் கேட்டு அவர் கொடுக்க மருத்துட்டார். அந்த கடுப்பில் நாங்க கொண்டு போன சக்கு மூடைல வெள்ளரிக்காய் நிரப்பினோம் என்க கைல டார்ச் லைட் இருந்ததால தெளிவா பற்த்து பரிக்க முடிஞ்சுது.
எல்லதையும் கொண்டு ஊருக்கு போய்டோம். அடுத்த நாள் எங்க எரியால எல்லா வீட்லயும் வெள்ளரிக்காய் ஸ்பெஷல்....
சுவர்....!!!!!! - 1
மாப்பிள்ளை கடை...!!!!
இந்த வார்த்தை நம்மில் பலருக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ( எண்பத்து ஒன்பது முதல் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு வரை) நியாயிற்றுக்கிழமைகளில் நானோபதேசம் படிக்க பொகும் பெண்களை கவர் பண்ணுவதற்காக வரிசையாக இந்த சுவற்றில் அமர்வது வழக்கம். பல பெண்களை சிலர் (நாம்) ரெகுலர் சைட் சீயிங் செய்வதும் உண்டு!. (சில சமயங்களில் ரெஸ்பாண்ஸ் பயங்கரமாக இருக்கும், பல காரணங்களுக்காக.... பெயர்கள் மறந்து விட்டன....!!!)
அப்படி ஒரு நாள் இனிமயான மாலை!!!!. ஒரு பெண் நம்மை பார்த்து, "மாப்பிள்ளை கடை வச்சிறிக்கி" என்று டயலாக் விட்டாள். அவ்வளவு தான்!!! கொதித்து எழுந்தான் எழிலன். எங்க வீட்டுல நாங்க இருப்போம், அதை எப்படி கிண்டல் பண்ணுரா பருங்க! கொஞ்ச நேரம் சவுண்டு உட்ட பிறகு தான் சொன்னான், "நம்ம முந்திக்கிட்டதுனால தப்புனோம். இல்லாட்டி பிரச்சனை நம்ம மேல திரும்பியிருக்கும்!!!!!"
என்ன ஒரு அட்வான்ஸ்டு திங்க்கிங்!!!!!
ஞாயிறு, 18 அக்டோபர், 2009
எங்க veedu
ஒoruku ஒரு மொட்டை சுவர் இருக்கும் எங்க வீட்டு சுவர் அப்பிடியான்னுஒரு முடிஉக்கும்வர முடியல்ல , எங்க வீது எல்ல நண்பர்களும் வந்து போகிற இடம் அழிகால் மேலதுரை nanbarkalum vanthu போவடுன்ன்டு அந்த வீட்டு வரண்டா சுத்தி iruntha thaduppu suvarai yaarum bayanpadutinathu kidaiyathu . எல்லாரும் அங்க இருந்த படிகட்டை பயன்படுத்துவது இல்லை. கிரிக்கெட் பார்க்க அல்லது ஏதாவது படம் பார்க்க அல்லது டிவி பார்க்கும் சமயம் தவிர்த்து நாங்க எல்லாரும் இருப்பது எங்க வீட்டு கோம்பௌந்து தான இது போப்க எது சமயம் அப்பிடீனு கேட்டா சமயம் இருந்தது . ரவி, பஸ்கேர் , போட்டு , உக்கார்ந்துபெசினட்ண்டுஎப்போவும் , எங்கள்ள யாரவது அதில் இர்ருந்துபேசிகொண்டே , இர்ருப்போம் த்சுனமில , அது இடிஞ்சு , போனது அத, திரும்பவும் கட்ட வீட்ல , சொல்லிஆசிது ஆனா , சியான , பதில் ,நினைவ ena கடுரடுல போகும் நான் ,oru murai police virattiyapothu paal antha compound taandi enga veetkuu vantatu ninaivu irrukku, Naanum jeganum mazhai nanainthu chengal vaithu thootam vaithatum ninaiu irrukku, oorula pipe line valai chenchapo enga veetu compound pakkam niraya manal kotti pottirntichu atila ukkarnthu pesurathu enga valakkam, antha manala eduthuttu ponapothu kadarkariilirunthu manal kondu vanthu pottu ukkarnthu pesinatndu, கோம்பௌந்து வெளிய நாங்க சீட்டு விளையாடி மைல்சாமி சாமியாரிடம் அறுப்பு வாங்கினதுண்டு . eppovaum engalla yaaravathu atil irrunthu pesikondae irruppom. Tsunamila athu idinju ponathu atha tirumpavum katta veetila solliaachithu aana அதுக்கு இன்னமும் saiyana patil இல்ல , ஆனா எங்க வீட்டுல அந்த சுவர நம்ம ninaiva மீண்டும் katuratula உறுத்திய இர்ருகொம்.
naan பால் ஜெகன் ராபி ரவி சுமல்ட் என எல்லாருடைய சின்ன கிரிக்கெட் விளையாடுற இடமா அத பயன்படுடிஇர்ருகிறோம் , அத குட்டி சுவருன்னு அதோட உயரம் பார்த்து சொல்லலாம் ஆனா நம்ம நினைவகளில் அதுக்கு எப்பவும் தனி இடம் உண்டு . நண்பர்களே ஜுலியன் அண்ணன் வீட்டு சுவரும் நாம் விளையாடும் அவங்க வீட்டு கலாம் குறித்த உங்களது பதிவை எதிர்பார்கிறேன், காலை கோவிலுக்கு போகும் உங்கள் வயது பெண்கள் குறித்த பதிவும் வரும் என்று நம்புகிறேன்..........
திங்கள், 12 அக்டோபர், 2009
சந்தோசத்தின் விலை
இபடிக்கு
ஜுலியன்
ஞாயிறு, 4 அக்டோபர், 2009
அன்னை வேளாங்கண்ணி திருவிழா (பஹ்ரைன்)
குட்டிச் சுவர்
சில நேரத்ல நம்மள யாரசும் திட்டி பெசியிருப்பாங்க. ஆனா நம்ம வழ்க்கைல நாம கூடுதலா செலவழித்த இடம் அந்த குட்டிச்சுவர்தான்.
எழிலன் வீட்டு சுவர். இதுல உட்கார்ந்த படி நாம நிரய விஷ்யம் படிச்சிருப்போம். எனக்கு தெரின்சு நிரய நகைச்சுவை சம்பவம் நடந்திருக்கு. நம்ம நண்பர்கள் சிலருக்கு சில விஷ்யங்கள் தெரியாமல் இருக்கலாம். அதனால ஒவ்வொருவருக்கும் தெரிஞ்ச ஞாபகம் இருக்கும் விஷயங்களை எழுதுங்கள்.
அஷோக்
சனி, 3 அக்டோபர், 2009
வணக்கம் நண்பர்களே
என்னப்பா எல்லாரும் கும்பலா எங்கயாச்சும் போயிட்டீங்களா....?????
பால் நீ இப்பல்லாம் யஹூ'ல வர்ரதே இல்ல. சுரெஷ் அண்ணா படிப்பில் பிசி. இதயன் கிட்ட இருந்தும் ஒரு தகவல் இல்ல.
ஏன் எல்லாரும் அமைதியா இருகீங்க. ஏதாச்சும் பதில் கொடுங்க.
அஷோக்.
சனி, 5 செப்டம்பர், 2009
chinnapan
இது யர்ரு அப்டின்னு நம்ம ஒருல சின்ன குழந்தைக்குகூட தெரியும்
அவருஉண்மயான பேரு என்னனு எனக்கு தெரியாது . என்னக்கு தெரிஞ்ச நாள் முதல் அவரு கிழிஞ்ச சட்டையும் வேஷ்டியும் போட்டுதான் பார்திருக்கிறேன்
பைசா வேணுமின்னா யார் வீட்டு வாசல்லையவடு போய் நிப்பாரு
அவங்களும் கொடுப்பாங்க, அடிக்கடி மொட்டை போட்டு விடுவாங்க, எப்போவது புது சட்ட போடுவாரு அதுவம் சீகிரம் கிழிஞ்சிரும். நிறைய தடவ ஊருமுழுக்க நடப்பாரு மத்த கிறுக்கு புடிச்ச aallunga மாதிரி அவரு கிடையாது ஆனா அவர எல்லா பள்ளிக்குட பிள்ளைகளும் பார்த்து கிண்டல் பண்ணுவாங்க.
ஒரு நாள் நாங்க எல்லாரும் எங்க வீட்டு முன்னால இருந்து பேசிட்டு இருந்தோம் அப்போ அங்க வந்த சின்னப்பன் பைசா கேட்டு நின்னுட்டே இருந்தாரு அத பார்த்து நம்ம ஜோன்சன் அண்ணன் இது காரிய கிறுக்கு அப்பிடின்னு சொன்னாங்க அத கேட்டு சின்னப்பன் ஜோன்சன் அண்ணன் முன்னால வந்து நின்னு அவர ஒரு தீர்கமான பார்வை பார்தாறு அது என்னால மறக்கவே முடியாது அவரு மாதிரியே வேஷம் போட்ட நம்ம எபி தம்பி குருசடி திருநாள் அன்னிக்கி முதல் பரிசு வாங்கினான் சின்னப்பன் மாதிரி அவன் நடிச்சதுக்கு எல்லாரும் கை தட்டி சிரிச்சாங்க ஆனா நிஜத்துல சின்னப்பன் ....................
சுனாமிக்கு பிறகு அவர நான் பார்க்கவே இல்ல
என்ன அசின்னு தெரிஞ்ச யாரவது சொல்லுங்க அவரு என்ன ஆனாருன்னு .....
எப்போவாது வந்து போகிற அவரோஅட பார்வை நியாபகம் இன்னும் எதோ செய்யுது
திங்கள், 17 ஆகஸ்ட், 2009
திரைபடம்
வாழ்தூகள்
பால்
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
பறை (டும்!!!!! டும்!!!!! டும்!!!!!)
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றல் .....நம்ம சின்ன ஜுலியன் வருகிற "18" ஆம் தேதி நம்ம ஊருக்கு வர்றார். அதனால் ஊர்ல இருகிறவங்கள் "18" ஆம் தேதிக்கு அப்புறம் அவர ஊர்ல சந்திக்கலாம்...!!! (டும்!!!! டும்!!!! டும்!!!!!).....
அதேபோல நாம பெரிய ஜுலியன் "Saudi" ல இருந்து இந்த மாதம் "20" ஆம் தேதி ஊருக்கு வர்றார்..... (டும்!!!! டும்!!!! டும்!!!!!)
ஜெயதாஸ் ஓடு !!! ஜான்சன் ஓடு !!!
முன்பெல்லாம் பஞ்சியர் அவர் தோப்பில் உள்ள வேலியில் கிழங்கு நட்டு வைத்திருப்பார், சம்பவம் நடந்த அன்று நமது நண்பர்கள் சிலர் திட்டமிட படி ஒரு சாக்கு மூடை எடுத்துக்கொண்டு பஞ்சியார் தோப்புக்கு சென்று அங்கு நட்டு வைத்திருந்த கிழங்கு அனைத்தையும் பிடுங்கி மூடைஇல் அடைத்துவிட்டு அவர் தொபில் இருக்கும் பெரிய கிணற்றில் உள்ள மீன்களை பிடித்து கொண்டுஇருந்தர்கள் அச்சமயத்தில் பஞ்சியார் தோப்ப்பிர்க்குள் இருக்கும் இவர்களை பார்த்து ஓடிவர இவர்கள் அனைவரும் மூடைகளை தூகிகொண்டு கூட்டத்தில் இல்லாதவர்கள் பெயர்களை சொல்லி (ஜெயதாஸ் ஓடு, ஜான்சன் ஓடு ....) என்று கூவிக்கொண்டே ஓடிவிட்டார்கள்.
பஞ்சியாரின் காதில் விழுந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள் அன்றைய பலிகடா ஆகிவிட்டார்கள்...
ஞாபக படுத்யவர்
அசோக்
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
மூந்தங்கிணறு
எப்படி நகர்கோவில்,நெல்லை,தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவ நதியாக உள்ளதோ அதுபோல நம்ம பிள்ளைதோப்பு,அழிக்கால்,மேலத்துறை மூன்ற்று ஊருக்கும் வற்றாத ஜீவகிணறு நம்ம பக்கத்து கிராமமான கன்னக்குறிச்சியிலிருக்க்ற மூந்தங்கிணறு தான். முற்காலத்தில் ஒரு வீட்டுக்கு ஓரிரு குடங்கள் தினந்தோறும் தண்ணி சுமந்து தான் கொண்டு வருவார்கள். தோராயமாக 2அல்லது 3கீமீ தூரம் இருக்குமென்று நினைக்கிறேன். பின்பு நான் சிறுவனாக இருக்கும்போது, டேங்க் கட்டி பைப் லைன் போடப்பட்டது. மக்கள் அப்பாடாவென்று பெருமூச்சு விட்ட நேரம், ஒரு பகுதி மக்கள் அவர்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று முறையிட்டார்கள். முறயீட்டை சம்பந்தப்பட்டவர்கள் காது கொடுக்காததால், இந்த செட் அப் வெட்டி எறியப்பட்டது. மீண்டும் தண்ணீர் சுமக்கும்படலம் சில வருடங்களுக்கு தொடர்ந்தது.
இந்த தண்ணியை குடித்தால் அது ஒரு தனி சுவைதான். கிணற்று தண்ணியென்றே சொல்ல முடியாது. இதை குடித்து பழகிவிட்டு, வெளியூர்களுக்கு செல்லும்போது அங்குள்ள தண்ணீர் எதோ ரொம்ப கசந்தது மாதிரி ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. நம்மில் பலர் இந்த தண்ணீரை விரும்பிகுடித்தவர்களே!!. சென்னையில் சில மாதங்கள் வேலை பார்த்த போது கூட, தண்ணீர் தகம் அடங்கவே செய்யாது. எப்பொண்டா நம்ம ஊரு தண்ணி குடிக்கமுடியுமுன்னு தோணும். ஆன இப்போ நம்ம ஊரு பைப்புல வர்ற தண்ணி அந்த அளவுக்கு இல்ல. போன வாரம் ஊரில் இருந்தப்பொ அம்மாகிட்ட கேட்டேன். அப்போதான் தெரிஞ்சுது, அது மூந்தன்கிணத்து தண்ணி இல்லண்ணு. கல்லுக்கட்டியிலிருக்கிர வேறு எதோ ஒரு கிணற்றிலிருந்து இப்போ தண்ணி வருதாம். நம்ம ஊர்ல மறிப்போன அல்லது நம்ம இழந்து போன பல விஷயங்கள்ள அதுவும் ஒண்ணாயிற்று.
"பத்தோட பதினொண்ணு! அத்தோட இதுவும் ஒண்ணு"
சனி, 1 ஆகஸ்ட், 2009
அனைவரும் நலமா அசோக் இது என் ஜுலியன் மாமா மெயில் முகவரி _அமம்ள@yஅதூ.கம அலைபெதில் அனுபும் தங்க உ
வணகதுடன்
பால்
வியாழன், 30 ஜூலை, 2009
சுதந்திர ஓட்டம்
அவற்றில் ஒரு நிகழ்வை உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன் . பெரியவர்களுக்கான ஓட்டப்பந்தயம் இதில் நமது வயதினர் நமக்கு மூத்தவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். எட்மண்ட் அண்ணன் மைக்கில் பெயர்களை அறிவித்தார். பந்தயம் நம் கோவிலில் இருந்து முட்டம் ஊர் எல்லை வரை. ஓடம் துடங்கியது அனைவரும் ஓடிவிட்டார்கள் கோவில் அருகில் அனைவரும் ஓடியவர்களை எதிர்பார்த்தபடி இருக்க அவர்கள் ஒருவரையும் காணவில்லை நேரம் ஓடிக்கொண்டே இருக்க யாரையும் காணாததால் வேறு ஒரு கூட்டம் ஓடியவர்களை தேடி ஓடியதுஇன்னும் சிறிது நேரம் கழித்து இவர்களும் வரவில்லை. சரி என்ன தான் ஆனது பார்ப்போம் என்று மூன்றாவது அணியயும் போனது.
மூன்றாவது அணி முன்பு சென்ற இரண்டு அணிகளும் ஏன் திரும்ப வரவில்லை என்று கண்டுபிடித்தது...
காரணம் செலருக்கு தெரிந்திருக்கும்.
பந்தயத்தில் ஓடியவர்கள் ஓடி சென்றடைந்த இடம் நாம் முட்டம் செல்லும் வழியில் உள்ள கள்ளுகடையில்.. மூன்றாவது அணி செல்லும் போது அவர்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
ஞாபகப்படுதியது
அஷொக்
புதன், 29 ஜூலை, 2009
நண்பர்களே சந்திப்போம் வாருங்கள்...!!!!!! -
நாகர்கோவிலில் இருந்து ஊரின் நினைவுகோளோடு முதன் முதலாக இந்த பிள்ளைதோப்பு குரூப்பிர்காக எழுதுகிறேன் . இது கடமைக்காக மட்டுமல்ல .உணர்ந்ததை கொடுபதுகக . என் உணர்வுகளை உரசி பார்த்த உங்கள் முயற்சிஇன் வளர்ச்சியாக . பிள்ளைதோப்பு வலைத்தழம் பார்க்க நேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது . எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை . நீங்கள் நினைக்கலாம் அப்படி என்ன வேலை என்று .
சொல்கிறேன் நண்பர்களே , தம்பிகளே ,நான் சொந்தமாக "மனம் ஒளிர்ந்திட" மாத இதழ் நடத்துகிறேன் . இது வருங்கால இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு சிற்பி என எண்ணுங்கள் . அடுத்த படியாக "எலிசா ஐ ஏ எஸ் ஆகடமி" ஆரம்பித்து நல்ல ஸ்ட்ரெந்துடன் தொடர்கிறது . "மனம் பப்ளிகேஷன்ஸ்" வெளியீடுகள் தொடர்கிறது . மற்றும்
"மேண்டோரிஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் " எம் பி ஏ காலேஜில் பணி செய்கிறேன். சரி . இது என்னை பற்றி .
நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கல்?. உங்களின் உள்ளுர உணர்வுகள் அனைத்தும் ஜெயிக்க வாழ்துகிறேன் . என் நண்பர்களே உங்கள் கடந்த காலத்தை உனர்வுகளின் பொக்கிஷமக பாதுகாத்து வைத்திருப்பது உணதமான விசியம் . அந்த உந்த உணர்வுகள் ஐ பகிற்ந்து கொள்ள இந்த வலைத்தழம் அமைத்தது இனிமையான உணர்வுகளை அசை போட உகந்தது . நம் பிறந்த அந்த அழகிய கிராமமான எழில் மிகு சொர்க்கம் பிள்ளைதோப்பு . நான் பார்த்ததை , கேட்டதை, உணர்ந்ததை , உணரவைகபட்டத்தை எழுபத்து ஒன்பதாம் வருடம் தொட்டு எழுத விரும்புகிரைன் . ஆயிரத்து தொள்ளாயிரம் முதல் கேள்விப்பட்டதை முயற்சித்து எழுதுகிரேன் . இந்த ஊரின் உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும் . நம் சந்ததிக்கு படிப்பினயும் , உறமும் , அறமும் கொடுக்கும் . என்னை எழுத விட்டால் நாள் முழுதும் எழிதி கொண்டே இருப்பேன். நண்பர்களே உறக்கம் என்பது இறப்புக்கு சமானம்- என் கவிதை வரிகளோடு இந்த காலை பொழுதில் விடை பெருகிறேன். மீண்டும் 1979 திர்ம்புவோமா . அதற்காக காத்திருப்போம் . என்றும் உங்கள் முயற்ச்சியில் அக்கறை காட்டும் - எட்மண்ட் publisher-cum-editormanam olirnthida- tamil monthly
குறிப்பு : இனி சுரேஷ் அவர்களே மிக சரியாக தமிழாக்கம் பண்ணுங்கள்
சுருட்டு சித்தர்கள்
சுருட்டு சூப்பர் ஸ்டார் -ரபேல் தாத்தா
சுருட்டு சுப்ரீம் ஸ்டார் - அந்தோனி தாத்தா
சுருட்டு மக்கள் திலகம் - பிரான்சிஎஸ் தாத்தா
சுருட்டு இளைய தளபதி - ஜெர்மான்ஸ் பிள்ளை
சுருட்டு அல்டிமடே ஸ்டார் - தல்டாசி பிள்ளை
சுருட்டு சூப்பர் சுப்ரோயன் - ஜெலச்டின் பிள்ளை
சுருட்டு மக்கள் நாயகன் - சின்னியபிள்ளை
இப்போ சுருட்டுக்கு ரொம்ப கஷ்டம் யாரையும் சுருட்டோடு பாக்க முடியல
சுருட்டு பட்டம் யாருக்கு கொடுக்கலன்னு நீங்க பீல் பண்ணா நீங்க கொடுங்க சரியா
நன்றி
சுமல்ட்
டோமி அண்ணா
பெரிய டீம் உங்க டீம் தான் உங்க க்ரூப் ஆளுங்க எல்லோரும் சேர்ந்து அனுபவங்களையும் எழுதுங்க அந்த கடந்த காலத்து நினைவுகளை நினைத்து பார்க்க இதுதான் சரியான நேரம் .
நன்றி,
சுமல்ட்
நாய்களின் ஞான தந்தை
தொடரும். ...
சுமல்ட்
செவ்வாய், 28 ஜூலை, 2009
நம் இணையதள விபரங்கள்
கலசி ராஜா
உபயம்
சுமல்ட்
தெவரன் குளம்

அண்ணன்களை வரவேற்கிறேன்
சோப்பு பெட்டியில் வண்டி!!!!!
இந்த விளையாட்டின் சட்ட திட்டங்களை வகுப்பவர் நம்ம அருட் திரு அருள்தாஸ் . (அப்போதைய அருளாஸ் அண்ணன்) அவர்களே. இதற்காக அவர் சிரத்தையாக செய்யும் ரோட் நெட்வொர்க் மிக பிரமாதமாக இருக்கும். அந்த ரூட்டில் அவர் ஏற்படுத்தும் வளைவுகளும் அதற்காக அவர் வைக்கும் சிக்னல் போஸ்ட் களும் மிக மிக நேர்த்தியாக இருக்கும். ஈர மண்ணை எடுத்து அவர்கட்டும் மேம்பாலங்க்களோ சூப்பெரோ ஸுப்பெராக இருக்கும். பொதுப்பணி துறை கூட அப்படியெல்லாம் பிளான் பண்ணுவாங்களோன்னு இப்பொ தோணுது. அருளாஸ் அண்ணன் வைத்திருக்கும் வண்டி மட்டும் மரத்தால் செய்த கொஞ்சம் பெரிய வண்டியாகஇருக்கும். நம்மவர் வீடுகளில் கேரட் மற்றும் முட்டைகோஸ் சீவ பயன்படும் பழய செவ்வக வடிவ பெட்டி ஒன்றை வைத்திருப்பார். சிலி நாட்டில் மலை வாழ் மக்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்க செல்லவே அந்த நேர்த்தியான பாதயை அப்போதே அமைத்தாரோ என்று இப்போது எண்ண தோன்றுகிரது. நான் ஆறாம் கிளாசில் சேருவதர்க்கு முந்தய காலத்தில் பஸ்ஸீல் போவதே ஒரு புதிய அனுபவமாக இருக்கும். யாராவது நம்மளை நாரோயிலுக்கு கூட்டிட்டு போமாட்டாங்களான்னு தோணும். அந்த நேரத்தில் இந்த விளயாட்டு மனதுக்கு மிக ரம்மியமான பயண அனுபவத்தை கொடுக்கும். இதில் இன்னொரு எக்ஸ்பெர்ட் நம்ம ஜான்சன். எதை செய்தாலும் நேர்த்தியாக செய்வது ஜான்சனின் தனித்துவம். இவரை பற்றி நாம் பட்டம் விடுவது பற்றி எழுதும்போது பார்ப்போம்.
அருளாஸண்ணன் , புர்ர்ர் என்று வாயால் சத்தம் கொடுத்துக்கொண்டு முட்டி போட்டு ஊந்து ஊந்து வண்டி ஓட்டிக்கொண்டு போக, அவர்காட்டும் சைகைகளுக்கு ஏற்ப மற்றவர்கள் வண்டி ஓட்டுவது என் கண்முன்னே நீற்கிறது.
ஜான்சன் , ஜெயதாஸ் தவிர இதில் பங்கேற்ற மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. யராவது இருந்தால் குறிப்பிடவும்.
திங்கள், 27 ஜூலை, 2009
பிரவுனி - என் நினைவில்....!!!!!!!!
நாய் என்றால் பிரவுனி தான். எனக்கு மிக மிக நெருக்கமானது. அது எங்க வீட்ல வைக்கும் பழய சோற்றையும் கஞ்சி தண்ணீயும் நக்கி குடிக்கும் சத்தம் இன்னும் என் காதுகளில் கேட்கிறது.கூட பழய மீன் குழம்போ கறி குழம்போ சேர்ந்தால் அவனுக்கு கொண்டட்டம் தான். வலாட்டுவத்தில் அவனுக்கு நிகர் அவனே!
அப்போ சிறுவர்களாக இருந்த ராபி,எபி,இதயன் அதோடு நன்றாக விளையாடுவார்கள். அது எப்பிடின்னா , பிரவுனிக்கு ஞாயிற்று கிழமை கூட தெரியும். பத்து மணி பஸ்ல வரும் எங்க பிளெமிங் அண்ணனை பார்க்க காத்துக்கிட்டிருக்கும். அவுங்க அதுக்குன்னு ஸ்பெஷல்லா கறி கடையில வாங்கிட்டு வர்ற எலும்பும் சவ்வும் அதுக்கு ரொம்ப பிடிக்கும். பஸ்ல இருந்ந்து அவுங்க இறங்கினதும் ஓடி பொய் அவுங்க கூடவே வாலாட்டிக்கிட்டு நடந்து வரும். அவுங்களும் அது பக்கத்துல உக்காந்து ஒன்னு ஒண்ணா ஊட்டி விடுவாங்க.
இன்னொரு விஷயம் - எங்க அம்மாச்சி இந்த நாயோடு உரையடுவது தான். அதுவும் அவங்க சொல்றத அப்படியெ கேட்கும். நாய் , மாடு ,கோழி தவிர மனிதர்களையும் ஒரே வார்த்தையில் அடங்க வைக்கும் தனி திறமை அம்மாச்சியிடம் நிறைய உண்டு. அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் தூத்துக்குடியில் இன்று தலை நிமிர காரணமாய் இருந்தது நிதர்சனம். (எடுத்துகாட்டு : நேரம் தவறாமை, திட்ட மிட்டு செயல் படுதல் ,இறை வழிபாடு )
பிரவுனியை பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயம் நியாபகம் வருது. நம்ம பிலோமி அத்தை (டோமி அம்மா)வீட்ல ஒரு நாய் இருபத்து வருஷமா இருந்தது. வெள்ளையும் கருப்பும் கலந்த கலர். எதோ ஒரு சந்தர்பத்துல அது டோமி அப்பாவை காப்பாற்றியதாக எனக்கு நியாபகம் இருக்கு. இதைப்பற்றி யோசித்தாலும் வேறு ஒன்றும் நியாபகத்தில் இல்லை. டொமினிக் ( வாத்தியாரே ) இதைப்பற்றி எதாவது எழுதினால் நன்றாக இருக்கும்
லோய் maappula
ஞாயிறு, 26 ஜூலை, 2009
Browny
சனி, 25 ஜூலை, 2009
இது எங்க ஊரு விளையாட்டுக்கள்
1 கசபுச்ச
2 ஆவியம் மனியாவியம்
3 ஐஸ் பால்
4 வாரவராண்டோ
5 கள்ளம் போலீஸ்
6 கொட்டி கம்பு
7 ஒரு சொளத்தி
8 ஜில் குதிர
9 தாச்சி ஓடிவாலோ
10 மட்ட பந்து
11 ஏறி பந்து
12 வாழ கள்ளன் வந்டுருட்டி
13 அடுக்கு உப்பு
14 களச்சி உடறது
15 குதிர இட்டி
16 குறுக்கு வட்டம் ஓட்டம்
17 நாடு பிடிக்கிறது
18 முத்து சீவுறது
19 வண்ணான் சேலை
20 சோவி சீவுதல்
21 மாற குரங்கு
22 அம்பு உடறது
23 கூடு சீவுறது
24 பம்பரம்
25 செவேன்டீஸ்
26 ஹாக்கி
27 பூப்பது
28 கிரிக்கெட்
30 புட்பால்
31 பாட்மிண்டன்
3௨ கபடி
இன்னும் பல விளையாட்டுக்கள் உண்டு , இது போல பொம்பள பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு சின்ன வயசுல நானும் விளையாடி இருக்கேன்.
1 வட்டு
2 பூபரிக்க வருகிறோம்
3 கொலு பொம்மை
இன்னும் உண்டு ஆனா என்ன பண்ண நமக்கே மறந்து போச்சு. நம்ம புளைங்களுக்கு என்ன தெரியும் சொல்லி கொடுங்கப்பா. இடு நம்ம பரம்பரை மரபு கலாசாரம் அழிய கூடாது இப்ப உள்ள பசங்க என்ங்க விளையாடுது புல்லா டிவி, லவ் இத தவிர ஒன்னும் காணோம்.
நண்பா இதயா இந்த விளையாட்டு ரூல்ஸ் எல்லாம் கத்துகிட்டு உன் பிழைக்கு சொல்லிக்கொடு. டவுட் எதாச்சும் வந்த அண்ணன்கட்டே கேளு.
நாம இன்னும் அந்த விளையாட்டுகள விளையாட முடியயுமா, அந்த நாட்கள் திரும்ப வருமா???????.......
எண்ணமும் எழுத்தும் "சிந்தனைச் செல்வன் சுமல்ட் "
வெள்ளி, 24 ஜூலை, 2009
சிந்தனை செல்வன் சுமல்ட் - மொட்டயம்பிள்ளை
எங்க ஊர்ல பழைய காலத்துல நிறைய மந்திரவாதி இருந்ததா சொல்வார்கள் நிறைய பேய் கதைகள் சொல்வார்கள் ஆனால் நான் சிறு வயதில் பார்த்து பயந்த ஆள் மொட்டயம்பிள்ளை / கடிச்சான் பிள்ளை . அப்புறம் அவருக்கு வயசு ஆகும்போது ஜெலச்டின் பிள்ளை (மீசை) அவருக்கு அரிஷ்டம் வாங்கி கொடுத்து மந்திரம் படிச்சாரு அது சும்மா டூப்புன்னு இப்பதான் புரியுது. எது எப்படியோ பலபேர் பயந்தங்க என்பது மட்டும் உன்ன்மை. சாயுங்காலம் தெக்க விளையாடும் போதும் அவர வச்சி விளையாடி அவர் அடிக்க வரும் போதும் எல்லாரும் ஓடறதும் சந்தோசம் தான் இப்ப எல்லாம் யாரும் விளையாடுறது இல்ல பயக்களுக்கு சைட் அடிக்கவே நேரம் சரியா இருக்கு. மொட்டயம்பிள்ளையின் மந்திர பாஷையில் எனக்கு தெரிஞ்சது
கிண்கிணி மங்கினி மாலை கண்காணி
தொட்டிச்சி பட்டிச்சி
இந்திரவதி சந்திரவதி
ஜார்ஜ் முனி அம்ப்ரோஸ் முனி
வெள்ளை றேர் கறுத்த றேர் .
எண்ணமும் எழுத்தும் - "சிந்தனை செல்வன்" சுமல்ட்
வியாழன், 23 ஜூலை, 2009
சில்வர் பஸ்
எங்க ஊர்ல வந்த பஸ்ல எனக்கு பிடிச்ச பஸ் சில்வர் பஸ் மற்றும் மணக்குடி பஸ் (பழைய கோழி கள்ளன் ) அந்த பஸ் ஐ பாத்தாலே ஒரு சந்தோசம் வரும் புத்தன்துரை மற்றும் அல்லாமல் எங்க சொந்தங்கள் வாழும் கடற்கரை ஊருக்கு செல்லும் பஸ் அது என்பதால் மிகவும் பிடிக்கும் . கோழி கள்ளன் பஸ் ஊர்ல உள்ள நிறைய கோழிகளை அடித்து விட்டு போவதால் அந்த பஸ் "மை FAVOURIT - மற்றும் நல்ல ஸ்பீடா போவான் . -
எண்ணமும் எழுத்தும் - சிந்தனை செல்வன் "சுமல்ட்"
வழி தடம் எண் 39 - ராமையா
திங்கள், 20 ஜூலை, 2009
வளி தடம் 39
வழி தடம் எண் 39 - தொடர்ச்சி
உள்ளத்தில் எத்தனை உணர்வுகள் இருந்தும் , இன்றைக்கு நிலைமையில் நான் (பெரும்பாலும் நம் நண்பர்களும் ) அதன் உபயோகிப்பதாக இல்லை . காரணம் பல உண்டு . நான் ஏறாத காரணம் - பஸ்ல ஏறுனா , எல்ல்லாம் தெரியாத முகங்கள் . ஒரு அந்நியனை போல நம்ம்மை பார்பதாக ஒரு எண்ணம்.
இந்த நியாபகங்களை , எழுதுவடதற்கு , தூண்டுதலாக இருந்த அசோகக் , மிக்க நன்றி
ஞாயிறு, 19 ஜூலை, 2009
வழி தடம் எண் 39

வழி தடம் எண் 39 எங்க ஊர் பேருந்து, இதுதான் எங்க ஊர்மக்கள் எல்லாரும் வெளிஊருக்கு போயிட்டு வர உதவியாக இருக்கும். நாகர்கோயில்ல இருந்து பிள்ளைதோப்பு வரை தினமும் ஒரு பத்து வாட்டி வந்து போகும். எல்லா மக்களுக்கும் ஒரு வகைல இது ரொம்ப உதவியாக இருக்கும்
எங்க ஊர்ல உள்ள நண்பர்கள் எல்லாரும் வேறு வேறு பள்ளிகூடங்கள்ள படிச்சாலும் ஒரே நேரத்ல இந்த பஸ்லதான் போயிட்டு வருவோம். காலேலஎட்டு மணிக்கு உள்ள ட்ரிப் அது எங்களோட ட்ரிப் யாரையும் மதிக்காம சத்தம் போட்டிட்டு அரட்டை அடித்தபடியே பள்ளிக்கூடம் போவோம்.
சில நேரங்களில் பக்கத்து ஊர் பசங்க கூட சண்டை கூட போடுவோம். எல்லாம் பொண்ணுங்க விஷயத்த்லத்தான். பக்கத்து ஊர் பசங்கள பஸ்ல ஏற விடாம படிக்கட்லே நிப்போம். கண்டக்டர் எதாச்சும் சொன்னா அவருக்கு திட்டு அடி. அதனால அவரும் ஒன்னும் சொல்லமாட்டார்.
இப்பல்லாம் யாரும் அதிகமா பஸ்ல போறதா தெரியல்ல...
புதன், 15 ஜூலை, 2009
சண்டே ஸ்பெஷல்

சண்டே அப்படின்னா எனக்கு நினைவுக்கு வர்றது நாம சந்திக்கும் தினம். ஊர்ல எல்லாரும் கோவிலுக்கு பூசைகோ இல்லன்ன ஜெபம் பண்ணவோ போவாங்க ஆனா நாம மாற்ற நண்பர்கள சந்திக்க போவோம்.
சண்டே காலேல நேரத்தே முழிச்சு ஆத்துல பொய் குளிச்சுட்டு கோவிலுக்கு போனா அங்க எல்லா நண்பர்களையும் பார்க்கலாம். அபடியே கோவில் பக்கத்ல இருக்கிற மேடைல வரிசையா இருந்து வர்ற பெருசுகள நக்கல் அடிசுட்டிம், சைட் அடுசுட்டும் நேரம் போகுறது.
சில பெருசுங்க இத நோட்டம் போட்டிட்டு நம்ம எல்லாரயயும் அங்க இருந்து துரத்தி அடிச்சிருவாங்க. நாம அப்படியே அவங்கள ஒரு லுக் விட்டபடியே பக்கத்ல இருக்கிற மையாகுளில பொய் நாம வேலைய ஆரம்பிச்சுருவோம்......
திங்கள், 13 ஜூலை, 2009
சுருட்டு
யாரும் விளையாடும் தோட்டம்.
திங்கள், 6 ஜூலை, 2009
முகவுரை
அனைத்து பிள்ளைதோப்பு நண்பர்களுக்கும் வணக்கம்.
நம் கனவுகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை வரை நாம் அடைவதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளோம். இவை அனைத்திற்கும் நம் நண்பர்கள் தான் காரணம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
சுரேஷ் அண்ணன் நம் ஊரில் நாம் இருக்கும் பொழுது நடந்த சில சம்பவங்கள் அல்லது நம் ஊரைப்பற்றி நம்முடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பக வெளியிட்டால் என்ன என்று என்னிடம் கேட்டர்கள்.
நல்ல ஒரு சிந்தனை. அதன் பின் மேற்கொண்ட முயற்சியில் உருவானதுதான் இது.
நம் நண்பர்களில் நல்ல கவிஞர்கள், சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் உதவியுடன் இந்த வரயுரையை தொடர்வோம்.
நண்பர்களே உங்கள் மனதில் உள்ள அனைதயயும் நமது யாஹூ குரூப்இல எழுதுங்கள். அதை தமிழில் மொழி பெயர்த்து நான் இங்கே வெளியிடுஹிரேன்.
சிறிது நாட்கள் கழித்து எவ்வாறு தமிழில் எழுதுவது என்று விவரிக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் நண்பன்
அசோக்.



