திங்கள், 20 ஜூலை, 2009

வழி தடம் எண் 39 - தொடர்ச்சி

39 ஐ பற்றி நினைக்கும் பொது, அதை காதல் வாகனம் என்று அழைத்தும் , எழிலன் எழுதிய கந்தஹ கிடங்கு கவிதையும் , ஆலங்கொட்டை டிஸ்கோ - அவளை டாவடிக்க துடிக்கும் அப்போதைய நம்ம ஊரு ஹீரோ களும் , நம்ம அழிகால் பொண்ண இடிச்சதுக்காக , அழிகால் உடன்பிறப்புகளோடு சேர்ந்து கணபதிபுரத்து காரங்களை அடிச்சதும் , அந்த விஷயத்துல ராதாகிருஷ்ணன் டிரைவர், சாதிய(Caste) பாக்காம நமக்கு சப்போர்ட் பண்ணினதும் ...!!!! இன்னும் எத்தனை எத்தனையோ, நிகழ்வுகள் ,நினைவுகளாக ...!!!! 1982- கார்மேல்இல் , ஆறாம் கிளாஸ் முதல் , (வண்டில ஏறுனதும் சென்பகபெருமல் வாத்தியாரை நினைத்து வயிறு கலங்கும் அப்புறம் வளர வளர பயம் விட்டு போனது ). பல தடவை பஸ் டே கொண்டாட முயற்சிகள் நடந்ததுண்டு . ஆனால் ஓரிரு முறை மட்டுமே சாத்தியமானதாக நியாபகம் . சக பேருந்து கள்ளில் கொண்டாடும்போது , நம் இகலாமையை நினைத்து வருதபடுவத தவிர வேறொன்றும் செய்ய முடிவதில்லை. 1992 -இல் ஸ்காட் -இல் , BSc முடித்தவரை , என் அனுதின வாழ்வின் ஒரு அங்கமாக , உணர்வுகளோடு கலந்த 39…..!!!!

உள்ளத்தில் எத்தனை உணர்வுகள் இருந்தும் , இன்றைக்கு நிலைமையில் நான் (பெரும்பாலும் நம் நண்பர்களும் ) அதன் உபயோகிப்பதாக இல்லை . காரணம் பல உண்டு . நான் ஏறாத காரணம் - பஸ்ல ஏறுனா , எல்ல்லாம் தெரியாத முகங்கள் . ஒரு அந்நியனை போல நம்ம்மை பார்பதாக ஒரு எண்ணம்.

இந்த நியாபகங்களை , எழுதுவடதற்கு , தூண்டுதலாக இருந்த அசோகக் , மிக்க நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக