
வழி தடம் எண் 39 எங்க ஊர் பேருந்து, இதுதான் எங்க ஊர்மக்கள் எல்லாரும் வெளிஊருக்கு போயிட்டு வர உதவியாக இருக்கும். நாகர்கோயில்ல இருந்து பிள்ளைதோப்பு வரை தினமும் ஒரு பத்து வாட்டி வந்து போகும். எல்லா மக்களுக்கும் ஒரு வகைல இது ரொம்ப உதவியாக இருக்கும்
எங்க ஊர்ல உள்ள நண்பர்கள் எல்லாரும் வேறு வேறு பள்ளிகூடங்கள்ள படிச்சாலும் ஒரே நேரத்ல இந்த பஸ்லதான் போயிட்டு வருவோம். காலேலஎட்டு மணிக்கு உள்ள ட்ரிப் அது எங்களோட ட்ரிப் யாரையும் மதிக்காம சத்தம் போட்டிட்டு அரட்டை அடித்தபடியே பள்ளிக்கூடம் போவோம்.
சில நேரங்களில் பக்கத்து ஊர் பசங்க கூட சண்டை கூட போடுவோம். எல்லாம் பொண்ணுங்க விஷயத்த்லத்தான். பக்கத்து ஊர் பசங்கள பஸ்ல ஏற விடாம படிக்கட்லே நிப்போம். கண்டக்டர் எதாச்சும் சொன்னா அவருக்கு திட்டு அடி. அதனால அவரும் ஒன்னும் சொல்லமாட்டார்.
இப்பல்லாம் யாரும் அதிகமா பஸ்ல போறதா தெரியல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக