சனி, 5 செப்டம்பர், 2009

chinnapan

சின்னப்பன்
இது யர்ரு அப்டின்னு நம்ம ஒருல சின்ன குழந்தைக்குகூட தெரியும்
அவருஉண்மயான பேரு என்னனு எனக்கு தெரியாது . என்னக்கு தெரிஞ்ச நாள் முதல் அவரு கிழிஞ்ச சட்டையும் வேஷ்டியும் போட்டுதான் பார்திருக்கிறேன்
பைசா வேணுமின்னா யார் வீட்டு வாசல்லையவடு போய் நிப்பாரு
அவங்களும் கொடுப்பாங்க, அடிக்கடி மொட்டை போட்டு விடுவாங்க, எப்போவது புது சட்ட போடுவாரு அதுவம் சீகிரம் கிழிஞ்சிரும். நிறைய தடவ ஊருமுழுக்க நடப்பாரு மத்த கிறுக்கு புடிச்ச aallunga மாதிரி அவரு கிடையாது ஆனா அவர எல்லா பள்ளிக்குட பிள்ளைகளும் பார்த்து கிண்டல் பண்ணுவாங்க.
ஒரு நாள் நாங்க எல்லாரும் எங்க வீட்டு முன்னால இருந்து பேசிட்டு இருந்தோம் அப்போ அங்க வந்த சின்னப்பன் பைசா கேட்டு நின்னுட்டே இருந்தாரு அத பார்த்து நம்ம ஜோன்சன் அண்ணன் இது காரிய கிறுக்கு அப்பிடின்னு சொன்னாங்க அத கேட்டு சின்னப்பன் ஜோன்சன் அண்ணன் முன்னால வந்து நின்னு அவர ஒரு தீர்கமான பார்வை பார்தாறு அது என்னால மறக்கவே முடியாது அவரு மாதிரியே வேஷம் போட்ட நம்ம எபி தம்பி குருசடி திருநாள் அன்னிக்கி முதல் பரிசு வாங்கினான் சின்னப்பன் மாதிரி அவன் நடிச்சதுக்கு எல்லாரும் கை தட்டி சிரிச்சாங்க ஆனா நிஜத்துல சின்னப்பன் ....................
சுனாமிக்கு பிறகு அவர நான் பார்க்கவே இல்ல
என்ன அசின்னு தெரிஞ்ச யாரவது சொல்லுங்க அவரு என்ன ஆனாருன்னு .....
எப்போவாது வந்து போகிற அவரோஅட பார்வை நியாபகம் இன்னும் எதோ செய்யுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக