ஜூலியன் அண்ணன் ஒருமுறை குல்பி ஐஸ் குறித்து எழுத கேட்டார்கள் அதற்கு இது சரியான நேரம் என்பதால் ......................
நம்ம ஊர்ல இருந்து பள்ளிக்கூடம் படிச்சதுல அதிகமான பேர் படிச்சது முட்டம் பள்ளிக்கூடம் அல்லது கணபதிபுரம் பள்ளிகூடம்தான் ஆனாலும் கார்மேல் பள்ளிகூடத்துல படிக்கிறது ஒரு பெருமையா இருந்ததுண்டு. நான் கார்மேல் பள்ளிகூடத்துல நாலு வருசம்தான் படிச்சிருக்கேன். ஏன் கதை எல்லாருக்கும் தெரியும் . நம்மள பல பேரு ஆறு வருஷம் அங்கேயே படிச்சதுண்டு, கடைசி நாள்களில் பசுமை நிறைந்த நினைவுகளே .... பாடல் பாடி இருந்தாலும் நாம மறந்து போன விஷயம் நிறைய உண்டு . நமக்கு பாடம் சொல்லிக்குடுத்த வாத்தியாரு , க்ரௌண்ட சுத்தி ஓடவிட்ட டிரில் வாத்தியாரு , கூட படிச்சநண்பர்கள் , கேட் வாட்ச்மன் எஸ் பீ எம்போரியம் கடை எல்லாம் மறந்து போக வாய்ப்பு உண்டு , ஆனா நாம மறக்காத விசயங்களில் ஒன்னு குல்பி ஐஸ், இது ஏதோ தூள் படத்துல லைலா சொன்னதா நினைக்க வேண்டாம் , இது எங்களுக்கு ரெம்ப பழசு . நீல கலர் கேட் பக்கமா சின்னதா ஒரு தள்ளு வண்டில வச்சு கொண்டு வருற அத சுத்தி அங்க படிச்ச எல்லாரும் ரெகுலர் கஸ்டமர் , குட்டியா இருக்குற அந்த வண்டில உள்ள சின்ன குளிர்சாதன பெட்டில இருந்து எடுத்து தரும்போதே நாக்கில் ஒருமாதிரியான உணர்வு வந்திரும் , வித விதமான கலர்ல அந்த ஐஸ் கிடைக்கும் , என்ன கலர்ல ஐஸ் சாபிட்டானு சாப்பிட்டவன் வாய வச்சு சொல்லிடலாம் , பொதுவா சிவப்பு , பச்சை , அப்புறமா மஞ்சள் கலந்த வெள்ளை கலர்ல ஐஸ் கிடைக்கும் , எல்லாதையும் விட மஞ்சள் கலந்த வெள்ளை நிற ஐஸ் ரெம்ப நல்லா இருக்கும் , அத வெண்ணிலா சுவைன்னு சொல்லுவாங்க, அலுமினியம் வைச்சு மூடி அந்த ஐஸ் கிடைக்கும், அந்த மூடிய களத்துற வரைக்குமான நிமிடங்கள் எங்கள் பொறுமையை வெகுவாக சோதிக்கும். அனாலும் அதற்க்கான காத்திருப்புகள் மிகவும் ரசிக்ககூடிய நினைவுகளாய் உள்ளன , குல்பி ஐஸ் பற்றி சொல்லும்போது அந்த வண்டில வச்சிருக்குற சின்ன கண்ணாடி குப்பில உள்ள பஞ்சி மிட்டாய் மற்றும் பால்கோவா பற்றி சொல்லாம இருக்க முடியாது , பஞ்சும் நெருப்பும் பக்கத்துல்ல இறுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா தண்ணி பட்டா ஒன்னும் இல்லாம போகும் பஞ்சிமிட்டாய் பக்கத்துல குல்பி ஐஸ் விப்பாரு , நண்பர்களோடு கலந்து பேச , பஸ் வரும்வரைலான எங்கள் காத்திருப்புக்கு இந்த குல்பி ஐஸ் சின்ன ஆறுதல் ,பரீட்சை நடக்கும் நாள்களிலும் கிடைக்கும் இந்த ஐஸ் எங்கள் கடுமையான நாள்களின் நண்பன். நம்ம எல்லாருக்கும் பரிச்சயமான இந்த ஐஸ் இப்போ வட மாநிலவர்கள் நாகர்கோயில் பகுதியை சுற்றி விற்பனை செய்கிறார்கள். நண்பர்களே இது உங்கள் நேரம் நீங்களும் குல்பி ஐஸ் உடனான நீண்ட நினைவுகளை இங்கே பதிவு செய்யுங்கள் ........................
ரொம்ப நல்ல பதிவு இதயன். எனக்கு தெரிந்து நம்மூர்ல இருந்து முதல்ல கார்மல்ல படிச்சவர் பிஷப் அக்குயினாஸ் தான்னு நினைக்கிறேன். கார்மல் பத்தி எழுத எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. முயற்ச்சி பண்ணுறேன்.
பதிலளிநீக்குசுரேஷ்