செவ்வாய், 28 ஜூலை, 2009

சோப்பு பெட்டியில் வண்டி!!!!!

சுமார் ஒரு மதத்திற்கு முன் நானும் தூத்துக்குடியில் என்னோடு 10 வருடங்களாக நெருங்கி பழகும் நண்பன் ஜூடும் என்னுடைய காரில் ஊருக்கு வருவதற்காக கிளம்பினோம். திருநெல்வேலியை கடப்பதற்காக புதிதாக வேலை னடந்துகொண்டிருக்கும் பை பாஸ் ரோடு வழியாக வந்தோம். பொட்டல் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கரடு முரடாக இருந்தது. பிறகு ஒரு மேம்பாலம் செங்குத்தாக ஏறியது. அதை கடக்கும்போது ஒரு பழைய நினவு எனக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்தபோது நம்ம ஊருல தெக்க போய் சோப்பு பெட்டியை வைத்து வண்டி ஓட்டி விளையாடிய நியாபகம் வந்தது.

இந்த விளையாட்டின் சட்ட திட்டங்களை வகுப்பவர் நம்ம அருட் திரு அருள்தாஸ் . (அப்போதைய அருளாஸ் அண்ணன்) அவர்களே. இதற்காக அவர் சிரத்தையாக செய்யும் ரோட் நெட்வொர்க் மிக பிரமாதமாக இருக்கும். அந்த ரூட்டில் அவர் ஏற்படுத்தும் வளைவுகளும் அதற்காக அவர் வைக்கும் சிக்னல் போஸ்ட் களும் மிக மிக நேர்த்தியாக இருக்கும். ஈர மண்ணை எடுத்து அவர்கட்டும் மேம்பாலங்க்களோ சூப்பெரோ ஸுப்பெராக இருக்கும். பொதுப்பணி துறை கூட அப்படியெல்லாம் பிளான் பண்ணுவாங்களோன்னு இப்பொ தோணுது. அருளாஸ் அண்ணன் வைத்திருக்கும் வண்டி மட்டும் மரத்தால் செய்த கொஞ்சம் பெரிய வண்டியாகஇருக்கும். நம்மவர் வீடுகளில் கேரட் மற்றும் முட்டைகோஸ் சீவ பயன்படும் பழய செவ்வக வடிவ பெட்டி ஒன்றை வைத்திருப்பார். சிலி நாட்டில் மலை வாழ் மக்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்க செல்லவே அந்த நேர்த்தியான பாதயை அப்போதே அமைத்தாரோ என்று இப்போது எண்ண தோன்றுகிரது. நான் ஆறாம் கிளாசில் சேருவதர்க்கு முந்தய காலத்தில் பஸ்ஸீல் போவதே ஒரு புதிய அனுபவமாக இருக்கும். யாராவது நம்மளை நாரோயிலுக்கு கூட்டிட்டு போமாட்டாங்களான்னு தோணும். அந்த நேரத்தில் இந்த விளயாட்டு மனதுக்கு மிக ரம்மியமான பயண அனுபவத்தை கொடுக்கும். இதில் இன்னொரு எக்ஸ்பெர்ட் நம்ம ஜான்சன். எதை செய்தாலும் நேர்த்தியாக செய்வது ஜான்சனின் தனித்துவம். இவரை பற்றி நாம் பட்டம் விடுவது பற்றி எழுதும்போது பார்ப்போம்.

அருளாஸண்ணன் , புர்ர்ர் என்று வாயால் சத்தம் கொடுத்துக்கொண்டு முட்டி போட்டு ஊந்து ஊந்து வண்டி ஓட்டிக்கொண்டு போக, அவர்காட்டும் சைகைகளுக்கு ஏற்ப மற்றவர்கள் வண்டி ஓட்டுவது என் கண்முன்னே நீற்கிறது.
ஜான்சன் , ஜெயதாஸ் தவிர இதில் பங்கேற்ற மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. யராவது இருந்தால் குறிப்பிடவும்.

1 கருத்து:

  1. naanga oodu vaithu vandi ooti vilaiyaduvom
    valankanniela amma vaangi thantha paint aditha mutal bus ennala marakka mudiyathu..
    marathula vandi mattum illa namma oorula potta kadal earumpothu maram viduratha patiyo allathu vaali viduratha pathiyo eluthina nalla irrukum

    பதிலளிநீக்கு