அவற்றில் ஒரு நிகழ்வை உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன் . பெரியவர்களுக்கான ஓட்டப்பந்தயம் இதில் நமது வயதினர் நமக்கு மூத்தவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். எட்மண்ட் அண்ணன் மைக்கில் பெயர்களை அறிவித்தார். பந்தயம் நம் கோவிலில் இருந்து முட்டம் ஊர் எல்லை வரை. ஓடம் துடங்கியது அனைவரும் ஓடிவிட்டார்கள் கோவில் அருகில் அனைவரும் ஓடியவர்களை எதிர்பார்த்தபடி இருக்க அவர்கள் ஒருவரையும் காணவில்லை நேரம் ஓடிக்கொண்டே இருக்க யாரையும் காணாததால் வேறு ஒரு கூட்டம் ஓடியவர்களை தேடி ஓடியதுஇன்னும் சிறிது நேரம் கழித்து இவர்களும் வரவில்லை. சரி என்ன தான் ஆனது பார்ப்போம் என்று மூன்றாவது அணியயும் போனது.
மூன்றாவது அணி முன்பு சென்ற இரண்டு அணிகளும் ஏன் திரும்ப வரவில்லை என்று கண்டுபிடித்தது...
காரணம் செலருக்கு தெரிந்திருக்கும்.
பந்தயத்தில் ஓடியவர்கள் ஓடி சென்றடைந்த இடம் நாம் முட்டம் செல்லும் வழியில் உள்ள கள்ளுகடையில்.. மூன்றாவது அணி செல்லும் போது அவர்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
ஞாபகப்படுதியது
அஷொக்
இந்த சம்பவத்தை நான் மறந்துட்டேன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குயூகிச்சு பாத்தா கண்டிப்பா கள்ளு குடிக்கத்தான் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
அந்த புண்ணியவானுங்க பெயரை கொஞ்சம் சொல்லுங்கப்பா!!!
க்ளூவாவது குடுங்க.