வியாழன், 30 ஜூலை, 2009

சுதந்திர ஓட்டம்

சம்பவம் நடந்தது நினைவிருக்கிறது ஆனால் என்று நடந்தது என்றுதான் நினைவில்லை. என் ஞாபகப்படி ஒரு சுதந்திர தினம் அன்று நாம் நம் கோவில் முன்னாடி உள்ள இடத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தினோம். அதில் சிறுவர்களும் பெரியவர்களும் கலந்துகொண்டார்கள்.

அவற்றில் ஒரு நிகழ்வை உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன் . பெரியவர்களுக்கான ஓட்டப்பந்தயம் இதில் நமது வயதினர் நமக்கு மூத்தவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். எட்மண்ட் அண்ணன் மைக்கில் பெயர்களை அறிவித்தார். பந்தயம் நம் கோவிலில் இருந்து முட்டம் ஊர் எல்லை வரை. ஓடம் துடங்கியது அனைவரும் ஓடிவிட்டார்கள் கோவில் அருகில் அனைவரும் ஓடியவர்களை எதிர்பார்த்தபடி இருக்க அவர்கள் ஒருவரையும் காணவில்லை நேரம் ஓடிக்கொண்டே இருக்க யாரையும் காணாததால் வேறு ஒரு கூட்டம் ஓடியவர்களை தேடி ஓடியதுஇன்னும் சிறிது நேரம் கழித்து இவர்களும் வரவில்லை. சரி என்ன தான் ஆனது பார்ப்போம் என்று மூன்றாவது அணியயும் போனது.

மூன்றாவது அணி முன்பு சென்ற இரண்டு அணிகளும் ஏன் திரும்ப வரவில்லை என்று கண்டுபிடித்தது...

காரணம் செலருக்கு தெரிந்திருக்கும்.

பந்தயத்தில் ஓடியவர்கள் ஓடி சென்றடைந்த இடம் நாம் முட்டம் செல்லும் வழியில் உள்ள கள்ளுகடையில்.. மூன்றாவது அணி செல்லும் போது அவர்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஞாபகப்படுதியது

அஷொக்

புதன், 29 ஜூலை, 2009

நண்பர்களே சந்திப்போம் வாருங்கள்...!!!!!! -

எட்மண்ட் publisher-cum-editormanam olirnthida- tamil monthly

நாகர்கோவிலில் இருந்து ஊரின் நினைவுகோளோடு முதன் முதலாக இந்த பிள்ளைதோப்பு குரூப்பிர்காக எழுதுகிறேன் . இது கடமைக்காக மட்டுமல்ல .உணர்ந்ததை கொடுபதுகக . என் உணர்வுகளை உரசி பார்த்த உங்கள் முயற்சிஇன் வளர்ச்சியாக . பிள்ளைதோப்பு வலைத்தழம் பார்க்க நேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது . எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை . நீங்கள் நினைக்கலாம் அப்படி என்ன வேலை என்று .

சொல்கிறேன் நண்பர்களே , தம்பிகளே ,நான் சொந்தமாக "மனம் ஒளிர்ந்திட" மாத இதழ் நடத்துகிறேன் . இது வருங்கால இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு சிற்பி என எண்ணுங்கள் . அடுத்த படியாக "எலிசா ஐ ஏ எஸ் ஆகடமி" ஆரம்பித்து நல்ல ஸ்ட்ரெந்துடன் தொடர்கிறது . "மனம் பப்ளிகேஷன்ஸ்" வெளியீடுகள் தொடர்கிறது . மற்றும்
"மேண்டோரிஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் " எம் பி ஏ காலேஜில் பணி செய்கிறேன். சரி . இது என்னை பற்றி .

நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கல்?. உங்களின் உள்ளுர உணர்வுகள் அனைத்தும் ஜெயிக்க வாழ்துகிறேன் . என் நண்பர்களே உங்கள் கடந்த காலத்தை உனர்வுகளின் பொக்கிஷமக பாதுகாத்து வைத்திருப்பது உணதமான விசியம் . அந்த உந்த உணர்வுகள் ஐ பகிற்ந்து கொள்ள இந்த வலைத்தழம் அமைத்தது இனிமையான உணர்வுகளை அசை போட உகந்தது . நம் பிறந்த அந்த அழகிய கிராமமான எழில் மிகு சொர்க்கம் பிள்ளைதோப்பு . நான் பார்த்ததை , கேட்டதை, உணர்ந்ததை , உணரவைகபட்டத்தை எழுபத்து ஒன்பதாம் வருடம் தொட்டு எழுத விரும்புகிரைன் . ஆயிரத்து தொள்ளாயிரம் முதல் கேள்விப்பட்டதை முயற்சித்து எழுதுகிரேன் . இந்த ஊரின் உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும் . நம் சந்ததிக்கு படிப்பினயும் , உறமும் , அறமும் கொடுக்கும் . என்னை எழுத விட்டால் நாள் முழுதும் எழிதி கொண்டே இருப்பேன். நண்பர்களே உறக்கம் என்பது இறப்புக்கு சமானம்- என் கவிதை வரிகளோடு இந்த காலை பொழுதில் விடை பெருகிறேன். மீண்டும் 1979 திர்ம்புவோமா . அதற்காக காத்திருப்போம் . என்றும் உங்கள் முயற்ச்சியில் அக்கறை காட்டும் - எட்மண்ட் publisher-cum-editormanam olirnthida- tamil monthly

குறிப்பு : இனி சுரேஷ் அவர்களே மிக சரியாக தமிழாக்கம் பண்ணுங்கள்

சுருட்டு சித்தர்கள்

இங்கு குறிப்பிடும் அனைவரும் மிக முக்கிய பிரபலங்கள் இருப்பின்னும் இதிலும் இவர்கள் பிரபலம்..

சுருட்டு சூப்பர் ஸ்டார் -ரபேல் தாத்தா
சுருட்டு சுப்ரீம் ஸ்டார் - அந்தோனி தாத்தா
சுருட்டு மக்கள் திலகம் - பிரான்சிஎஸ் தாத்தா
சுருட்டு இளைய தளபதி - ஜெர்மான்ஸ் பிள்ளை
சுருட்டு அல்டிமடே ஸ்டார் - தல்டாசி பிள்ளை
சுருட்டு சூப்பர் சுப்ரோயன் - ஜெலச்டின் பிள்ளை
சுருட்டு மக்கள் நாயகன் - சின்னியபிள்ளை

இப்போ சுருட்டுக்கு ரொம்ப கஷ்டம் யாரையும் சுருட்டோடு பாக்க முடியல

சுருட்டு பட்டம் யாருக்கு கொடுக்கலன்னு நீங்க பீல் பண்ணா நீங்க கொடுங்க சரியா

நன்றி
சுமல்ட்

டோமி அண்ணா

டோமி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு நன்றி , என் பெயர் சுமல்ட் அண்ணா , என் தம்பி பெயர் நாதன் ..

பெரிய டீம் உங்க டீம் தான் உங்க க்ரூப் ஆளுங்க எல்லோரும் சேர்ந்து அனுபவங்களையும் எழுதுங்க அந்த கடந்த காலத்து நினைவுகளை நினைத்து பார்க்க இதுதான் சரியான நேரம் .

நன்றி,
சுமல்ட்

நாய்களின் ஞான தந்தை

நம்ம ஊரு நாய்களுக்கு பெயர் சூட்டுவதில் எங்க மாமா கிரசியன் அவர்களை போல் யாரும் வர முடியாது . அவர் பெயர் வைத்த முதல் நாயின் பெயர் மடயன் , பின்பு எனக்கு தெரிந்தவை டிஸ்கோ ராஜா , ஸ்லொவ் மணி ,மணி கோபால் , தீபொறி கோவிந்தன் , முத்து, அரோக்கிய ஜெய பாஸ்கர் , டினாலின் இதில், அரோக்கிய ஜெய பாஸ்கர் அசோக் அண்ணா வுக்கு நல்ல நட்பு வுண்டு என்ன அண்ணே டென்னிஸ் புள்ள முடுக்குல விரட்னது ஞாபகம் இருக்கா ? அடுத்து மடயன் கத இதயன் அப்பாவுக்கு நல்லா தெரியும், அடுத்து ஸ்லொவ் மணி , மணி கோபால் இரண்டும் சேர்ந்து அந்தநியம்மா பாட்டிய கடிச்சது மறக்க முடியாது அது போல் டினாலின் சுனாமியில் தப்பி இப்போ வாய் கேட்டு போட்டு இறந்து விட்டது . இப்படி இருந்தாலும் எங்க மாமா எப்பவும் நாய்களின் பிரியர் தான் . மேலும் அவர் செய்த சேட்டைகள் இதயன் அப்பாவுக்கு நல்லா தெரியும் நம்ம பெரிய ஜுலியன் அண்ணனுக்கும் தெரியும் அண்ணன்கள் எல்லோருக்கும் தெரியும் ...

தொடரும். ...

சுமல்ட்

செவ்வாய், 28 ஜூலை, 2009

நம் இணையதள விபரங்கள்



நண்பர்களே நம் இணயதளம் தொடங்கி ஏழு மாதம் ஆகிறது இதுவரை நம் இணையதளத்தை எந்த நாடுகளில் எல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரம் மேற்கொண்ட படத்தில் இருகிறது. இந்த தகவல் நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஓன்று.


அசோக்.





கலசி ராஜா

நம்ம ஊர்ல கலசி விளையாட்டில் ஒரு தனி ராஜ்யம் படைத்த மாவீரன் கட்ட பஞ்சாயத்து நடத்திய ஒருவர் என்றல் அது அண்ணன் பெரிய ஜுலியன் அவர்களையே சாரும் . அவர் கலசி விடும் அழகும் ஐயோ ஐயோ அத கண்டிப்பா விவரிசே ஆகணும் . சாரத்த முக்கா கெட்டு கெட்டி ஒரு பக்கம் கலசி இன்னொரு பக்கம் துண்டு கெழங்கு , கடல , தேங்கா , சற்கர எல்லாம் வச்சி ஒரு நோக்குக்கு ஒரு நேரம் சாப்பிடுறது அடடா என்ன அழகு . நாங்க எல்லாம் சின்ன பசங்க அப்போ அவர்ட மட்டும்தான் கலசி வாங்கனும் கடையில வாங்க கூடாது கடையில வாங்குனா விளையாட்டுக்கு கிடையாது என்ன கொடும சார் இது . மேலும் எல்லா நேரமும் அண்ணன்கள் பேசினாலும் அடிபட கூடிய விஷயம் ஓடை குளியல் அதை பற்றி அவரோடு நன்றாக பழகிய அண்ணன்கள் சொல்வார்கள் ... ஜோசப் அண்ணனுக்கு நல்ல தெரியும் . னாங்ககுளிக்கும் பொது கேட்ட வார்த்தை சாம்பிள். அருகில் பகத்து ஊரு பொண்ணு நிக்குது. என்ன ஜோசப் நாளைக்கு எப்ப குளிக்க வருவ நான் நாளைக்கு ஆறு அரைக்குவருவேன் நீ வருவியா .பொண்ணு அவங்க தோழியிடம் கண்டிப்பா வருவேன் . என்ன பிக் அப்பு .. நீங்க பண்ணாததா ராசா ...

உபயம்

சுமல்ட்

தெவரன் குளம்


இந்த படத்தில் இருப்பது வேறெதுவும் இல்ல நம்ம தெவரன் குளம் தான். நம்மளோட வாழ்கைல இதுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. எனக்கு தெரிந்து நம்ம நண்பர்கள் எல்லாரும் நீந்த கத்துகிட்டது இங்கதான். நாம தினமும் இங்க வருவோம் குளிக்க நீந்தி விளையாட, துணி துவைக்க....
நாம குளிக்க வர்றப்ப வைத்தியர் அரிஷ்டம் கடைல ஒரு பாட்டி கிழங்கு வித்துகிட்டு இருப்பாங்க அவங்க கிட்ட கிழங்கும் தேங்கயும் வாங்கி சாப்பிட்டபடியே போவோம். தெவரன் குளம் கரைல சில நாட்கள் பக்கத்து ஊரு பசங்ககூட சண்டை கூட போடிருககோம்...

அண்ணன்களை வரவேற்கிறேன்

என் இனிய அண்ணன்ன்களை இன் முகத்துடன் வரவேற்கிறேன் . என்றும்உங்கள் வழிகாட்டுதல் மிஹ முக்கியம் எனவே எழுதுங்கள்ல்நமது வரலாறு என்றும் முக்கியம் . இன்று நான் உங்களுக்கு சொல்லபோகும் விஷயம் என்னவென்றால் நேரம் கிடைக்கும் பொது நீங்கள் நமது ப்லோக் பற்றி நினையுங்கள் . நமது ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும் அவங்க செய்த நல்ல விஷயம் எல்லாவற்றையும் இதில் பதிவு பண்ணுங்க யாரையும் விடாதிங்க கல்லறையில் கூட நிம்மதியா இருக்க விடமாட்டங்க நம்ம ஊர்ல. நாட்டிய குரசையும் பிடுங்கி வாழ்ந்த சுவடு இல்லாம ஆகிடங்க அந்த மயில் சாமி மட்டும் நல்ல கல்லறையில் நிம்மதியா தூங்குவார் . எங்க அம்மா குழி கூட இல்ல நண்பர்களே மனசுக்கு ஆறுதலான விஷயம் அதுதான் அத கூட தரல மயில் சாமி. எனவே பதிவு பண்ணுங்க அதிபட்டி மாதிரி ஆயிர கூடாது பிள்ளை பரவன் . யாரும் ஊர்ல இல்லன்னு வருத்த படாதிங்க உங்க கருத்துக்கள் போதும் நம்ம ஒரு ஆள் போதும் அத்தனை பேரையும் சமாளிக்க அந்த தில் நமக்கு உண்டு . சுரேஷ் அண்ணா அடிச்துவாரம் போட்ருக்கேன் அண்ணா . நம்ம ஊரு னில்லை இப்ப மோசம் .

சோப்பு பெட்டியில் வண்டி!!!!!

சுமார் ஒரு மதத்திற்கு முன் நானும் தூத்துக்குடியில் என்னோடு 10 வருடங்களாக நெருங்கி பழகும் நண்பன் ஜூடும் என்னுடைய காரில் ஊருக்கு வருவதற்காக கிளம்பினோம். திருநெல்வேலியை கடப்பதற்காக புதிதாக வேலை னடந்துகொண்டிருக்கும் பை பாஸ் ரோடு வழியாக வந்தோம். பொட்டல் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கரடு முரடாக இருந்தது. பிறகு ஒரு மேம்பாலம் செங்குத்தாக ஏறியது. அதை கடக்கும்போது ஒரு பழைய நினவு எனக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்தபோது நம்ம ஊருல தெக்க போய் சோப்பு பெட்டியை வைத்து வண்டி ஓட்டி விளையாடிய நியாபகம் வந்தது.

இந்த விளையாட்டின் சட்ட திட்டங்களை வகுப்பவர் நம்ம அருட் திரு அருள்தாஸ் . (அப்போதைய அருளாஸ் அண்ணன்) அவர்களே. இதற்காக அவர் சிரத்தையாக செய்யும் ரோட் நெட்வொர்க் மிக பிரமாதமாக இருக்கும். அந்த ரூட்டில் அவர் ஏற்படுத்தும் வளைவுகளும் அதற்காக அவர் வைக்கும் சிக்னல் போஸ்ட் களும் மிக மிக நேர்த்தியாக இருக்கும். ஈர மண்ணை எடுத்து அவர்கட்டும் மேம்பாலங்க்களோ சூப்பெரோ ஸுப்பெராக இருக்கும். பொதுப்பணி துறை கூட அப்படியெல்லாம் பிளான் பண்ணுவாங்களோன்னு இப்பொ தோணுது. அருளாஸ் அண்ணன் வைத்திருக்கும் வண்டி மட்டும் மரத்தால் செய்த கொஞ்சம் பெரிய வண்டியாகஇருக்கும். நம்மவர் வீடுகளில் கேரட் மற்றும் முட்டைகோஸ் சீவ பயன்படும் பழய செவ்வக வடிவ பெட்டி ஒன்றை வைத்திருப்பார். சிலி நாட்டில் மலை வாழ் மக்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்க செல்லவே அந்த நேர்த்தியான பாதயை அப்போதே அமைத்தாரோ என்று இப்போது எண்ண தோன்றுகிரது. நான் ஆறாம் கிளாசில் சேருவதர்க்கு முந்தய காலத்தில் பஸ்ஸீல் போவதே ஒரு புதிய அனுபவமாக இருக்கும். யாராவது நம்மளை நாரோயிலுக்கு கூட்டிட்டு போமாட்டாங்களான்னு தோணும். அந்த நேரத்தில் இந்த விளயாட்டு மனதுக்கு மிக ரம்மியமான பயண அனுபவத்தை கொடுக்கும். இதில் இன்னொரு எக்ஸ்பெர்ட் நம்ம ஜான்சன். எதை செய்தாலும் நேர்த்தியாக செய்வது ஜான்சனின் தனித்துவம். இவரை பற்றி நாம் பட்டம் விடுவது பற்றி எழுதும்போது பார்ப்போம்.

அருளாஸண்ணன் , புர்ர்ர் என்று வாயால் சத்தம் கொடுத்துக்கொண்டு முட்டி போட்டு ஊந்து ஊந்து வண்டி ஓட்டிக்கொண்டு போக, அவர்காட்டும் சைகைகளுக்கு ஏற்ப மற்றவர்கள் வண்டி ஓட்டுவது என் கண்முன்னே நீற்கிறது.
ஜான்சன் , ஜெயதாஸ் தவிர இதில் பங்கேற்ற மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. யராவது இருந்தால் குறிப்பிடவும்.

திங்கள், 27 ஜூலை, 2009

பிரவுனி - என் நினைவில்....!!!!!!!!

நாய் என்றால் பிரவுனி தான். எனக்கு மிக மிக நெருக்கமானது. அது எங்க வீட்ல வைக்கும் பழய சோற்றையும் கஞ்சி தண்ணீயும் நக்கி குடிக்கும் சத்தம் இன்னும் என் காதுகளில் கேட்கிறது.கூட பழய மீன் குழம்போ கறி குழம்போ சேர்ந்தால் அவனுக்கு கொண்டட்டம் தான். வலாட்டுவத்தில் அவனுக்கு நிகர் அவனே!

அப்போ சிறுவர்களாக இருந்த ராபி,எபி,இதயன் அதோடு நன்றாக விளையாடுவார்கள். அது எப்பிடின்னா , பிரவுனிக்கு ஞாயிற்று கிழமை கூட தெரியும். பத்து மணி பஸ்ல வரும் எங்க பிளெமிங் அண்ணனை பார்க்க காத்துக்கிட்டிருக்கும். அவுங்க அதுக்குன்னு ஸ்பெஷல்லா கறி கடையில வாங்கிட்டு வர்ற எலும்பும் சவ்வும் அதுக்கு ரொம்ப பிடிக்கும். பஸ்ல இருந்ந்து அவுங்க இறங்கினதும் ஓடி பொய் அவுங்க கூடவே வாலாட்டிக்கிட்டு நடந்து வரும். அவுங்களும் அது பக்கத்துல உக்காந்து ஒன்னு ஒண்ணா ஊட்டி விடுவாங்க.

இன்னொரு விஷயம் - எங்க அம்மாச்சி இந்த நாயோடு உரையடுவது தான். அதுவும் அவங்க சொல்றத அப்படியெ கேட்கும். நாய் , மாடு ,கோழி தவிர மனிதர்களையும் ஒரே வார்த்தையில் அடங்க வைக்கும் தனி திறமை அம்மாச்சியிடம் நிறைய உண்டு. அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் தூத்துக்குடியில் இன்று தலை நிமிர காரணமாய் இருந்தது நிதர்சனம். (எடுத்துகாட்டு : நேரம் தவறாமை, திட்ட மிட்டு செயல் படுதல் ,இறை வழிபாடு )

பிரவுனியை பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயம் நியாபகம் வருது. நம்ம பிலோமி அத்தை (டோமி அம்மா)வீட்ல ஒரு நாய் இருபத்து வருஷமா இருந்தது. வெள்ளையும் கருப்பும் கலந்த கலர். எதோ ஒரு சந்தர்பத்துல அது டோமி அப்பாவை காப்பாற்றியதாக எனக்கு நியாபகம் இருக்கு. இதைப்பற்றி யோசித்தாலும் வேறு ஒன்றும் நியாபகத்தில் இல்லை. டொமினிக் ( வாத்தியாரே ) இதைப்பற்றி எதாவது எழுதினால் நன்றாக இருக்கும்

லோய் maappula

என்ன எல்லாரும் நலமா ஆமா சில பேர் அனங்க மாட்டேன்குரிங்க என்ன உங்களுக்கு நம்ம போழிசு மாதண்டமா மாப்ள இதையா என்ன ஆரம்பிப்போம் எப்படி அசோக் அண்ணா உங்க மண்ட இருக்கே அட அட என்ன ஒரு மண்ட பௌல் என்னல அய்யா லோய் உங்கள்ளுக்கு கதை சீக்கிரம் chuda chuda வரும் அண்ணா unkalukku nantri

ஞாயிறு, 26 ஜூலை, 2009

Browny

என் மேனேஜர்இன் நாய் இறந்து போனதைப்பத்தி எனிடம் பேசிட்டு இருந்தாரு அப்போ எனக்கு ப்ரோவ்னி நினைவு வந்தது அதனால இந்த பக்கம் அதுக்கு. என் மனதை தொட்டவர்களில் ப்ரோவ்ன்ய்க்கும் முக்கியமான இடம் உண்டு . அது எங்கள் நாய் என்னடா எங்கள் அப்டின்னு பொதுவா எழுதிட்டான்னு தோனுதா , உண்மைலே அது அப்படித்தான் . அது சுரேஷ் அண்ணன் வீட்டுக்கு கன்யாகுமரில இருந்து கொண்டு வந்த நாய் ஆனா அது எல்லார் வீட்டுக்கும் வந்து போகும். வீடு கட்டும்பொது கோம்பௌந்து கேட் வழியா நாய் வராதபடி கேட் போடனும்ன்னு என் தத்தா சொல்லுவாரு எங்க வீட்டு கேட் ல ப்ரோவேனி புகுந்து விளையாடும். அது பசிச்சாலும் திருடாது. வெள்ளையும் ப்ரோவ்னும் கலந்த கலர்ல இருந்த அதுக்கு ப்ரோவ்னி இன்க்கர பேரு ரெம்ப பொருந்தும். குடிச்சிட்டு போற அழிகால் ஆளுங்களை பார்த்து குறைக்கும் . அதனால யாரோ அதுக்கு வாய் கட்டிடாங்க. சாப்பிட முடியாம அது இறந்து போனது . இறக்கும் பொது ஜெகன் அத ப்ரோவ்னி இன்னு கூபிட்டபோது முடியாம இருந்தாலும் எழும்பி வாலை ஆட்டிட்டு விழுந்து செத்து போனது . அதுக்கு முன்னும் பின்னும் அதமாதிரி ஒரு நாய் எங்க வீட்ட சுத்தி இருந்தது இல்லை இனி வருமான்னு தெரியல

சனி, 25 ஜூலை, 2009

இது எங்க ஊரு விளையாட்டுக்கள்

எங்க ஊர்ல நாங்க எல்லாரும் விளையாடிய விளையாட்டுகள்.
1 கசபுச்ச
2 ஆவியம் மனியாவியம்
3 ஐஸ் பால்
4 வாரவராண்டோ
5 கள்ளம் போலீஸ்
6 கொட்டி கம்பு
7 ஒரு சொளத்தி
8 ஜில் குதிர
9 தாச்சி ஓடிவாலோ
10 மட்ட பந்து
11 ஏறி பந்து
12 வாழ கள்ளன் வந்டுருட்டி
13 அடுக்கு உப்பு
14 களச்சி உடறது
15 குதிர இட்டி
16 குறுக்கு வட்டம் ஓட்டம்
17 நாடு பிடிக்கிறது
18 முத்து சீவுறது
19 வண்ணான் சேலை
20 சோவி சீவுதல்
21 மாற குரங்கு
22 அம்பு உடறது
23 கூடு சீவுறது
24 பம்பரம்
25 செவேன்டீஸ்
26 ஹாக்கி
27 பூப்பது
28 கிரிக்கெட்
30 புட்பால்
31 பாட்மிண்டன்
3௨ கபடி

இன்னும் பல விளையாட்டுக்கள் உண்டு , இது போல பொம்பள பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு சின்ன வயசுல நானும் விளையாடி இருக்கேன்.
1 வட்டு
2 பூபரிக்க வருகிறோம்
3 கொலு பொம்மை

இன்னும் உண்டு ஆனா என்ன பண்ண நமக்கே மறந்து போச்சு. நம்ம புளைங்களுக்கு என்ன தெரியும் சொல்லி கொடுங்கப்பா. இடு நம்ம பரம்பரை மரபு கலாசாரம் அழிய கூடாது இப்ப உள்ள பசங்க என்ங்க விளையாடுது புல்லா டிவி, லவ் இத தவிர ஒன்னும் காணோம்.

நண்பா இதயா இந்த விளையாட்டு ரூல்ஸ் எல்லாம் கத்துகிட்டு உன் பிழைக்கு சொல்லிக்கொடு. டவுட் எதாச்சும் வந்த அண்ணன்கட்டே கேளு.

நாம இன்னும் அந்த விளையாட்டுகள விளையாட முடியயுமா, அந்த நாட்கள் திரும்ப வருமா???????.......

எண்ணமும் எழுத்தும் "சிந்தனைச் செல்வன் சுமல்ட் "

வெள்ளி, 24 ஜூலை, 2009

சிந்தனை செல்வன் சுமல்ட் - மொட்டயம்பிள்ளை

எங்க ஊர்ல பழைய காலத்துல நிறைய மந்திரவாதி இருந்ததா சொல்வார்கள் நிறைய பேய் கதைகள் சொல்வார்கள் ஆனால் நான் சிறு வயதில் பார்த்து பயந்த ஆள் மொட்டயம்பிள்ளை / கடிச்சான் பிள்ளை . அப்புறம் அவருக்கு வயசு ஆகும்போது ஜெலச்டின் பிள்ளை (மீசை) அவருக்கு அரிஷ்டம் வாங்கி கொடுத்து மந்திரம் படிச்சாரு அது சும்மா டூப்புன்னு இப்பதான் புரியுது. எது எப்படியோ பலபேர் பயந்தங்க என்பது மட்டும் உன்ன்மை. சாயுங்காலம் தெக்க விளையாடும் போதும் அவர வச்சி விளையாடி அவர் அடிக்க வரும் போதும் எல்லாரும் ஓடறதும் சந்தோசம் தான் இப்ப எல்லாம் யாரும் விளையாடுறது இல்ல பயக்களுக்கு சைட் அடிக்கவே நேரம் சரியா இருக்கு. மொட்டயம்பிள்ளையின் மந்திர பாஷையில் எனக்கு தெரிஞ்சது

கிண்கிணி மங்கினி மாலை கண்காணி

தொட்டிச்சி பட்டிச்சி

இந்திரவதி சந்திரவதி

ஜார்ஜ் முனி அம்ப்ரோஸ் முனி

வெள்ளை றேர் கறுத்த றேர் .

எண்ணமும் எழுத்தும் - "சிந்தனை செல்வன்" சுமல்ட்

வியாழன், 23 ஜூலை, 2009

சில்வர் பஸ்

எங்க ஊர்ல வந்த பஸ்ல எனக்கு பிடிச்ச பஸ் சில்வர் பஸ் மற்றும் மணக்குடி பஸ் (பழைய கோழி கள்ளன் ) அந்த பஸ் ஐ பாத்தாலே ஒரு சந்தோசம் வரும் புத்தன்துரை மற்றும் அல்லாமல் எங்க சொந்தங்கள் வாழும் கடற்கரை ஊருக்கு செல்லும் பஸ் அது என்பதால் மிகவும் பிடிக்கும் . கோழி கள்ளன் பஸ் ஊர்ல உள்ள நிறைய கோழிகளை அடித்து விட்டு போவதால் அந்த பஸ் "மை FAVOURIT - மற்றும் நல்ல ஸ்பீடா போவான் . -

எண்ணமும் எழுத்தும் - சிந்தனை செல்வன் "சுமல்ட்"

வழி தடம் எண் 39 - ராமையா

எங்க ஊர் '39 டிரைவர் ராமையாவை தெரியாத ஆளே இருக்காது மனுஷன் வண்டிய உருட்டிட்டு போவதில் அவ்வள்ளவு பிரபலம் . அவரு வர்ற ஸ்பீடுல தூசி கூட பறக்காது. மக்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு ஆனா நாங்க பள்ளிக்கூடத்துக்கு போகும் போதும் வரும் போதும் அவரு வந்தா ஜாலி நல்ல ஊழ போட்டு அரட்டை அடிச்சி அவர கிண்டல் பண்ணிட்டு வீட்டுக்கு வரும் பொது அது ஒரு சுகம் .ஒரு வாட்டி அவரு இருந்தப்போ ஒரு மாட்டு வண்டி பஸ் ஐ ஓவர் டேக் பண்ணி போனப்ப பஸ் இல்ல அந்த பருத்தி விளை எபட ஆதிர்வது மாதிரி ஊளை போட்டு அவரு பஸ் ஐ எடுக்க மாட்டேன்னு சொல்லி சண்டைக்கு வந்தப்ப இருந்த ஜாலியோ ஜாலி இருந்தாலும் எல்லாருக்கும் பாதுகாப்பான டிரைவர் நம்ம ராமையா .... - சிந்தனை செல்வன் "சுமல்ட்"

திங்கள், 20 ஜூலை, 2009

வளி தடம் 39

எனக்கு தெரிஞ்சு ரெண்டு வாசல் பஸ்தான் முதல்ல 39-கு , பிறகு அத 4வாசல் பஸ்ஸா விட்டாங்க, அதோட நம்பர் TCB 7656 நம்ம ஊருக்கும் கடியப்படினம் ஊருக்கும் தான் அந்த பஸ்ஸ விட்டாங்க, நான் 2-g கிளாஸ் படிக்கும் பொது எங்க அண்ணனுக்கு புது நன்மை குடுத்தாங்க அன்னைக்கு தான் இந்த புது பஸ் ஊருக்கு வந்தது , நடுல உள்ள வாசல் பக்கம் நிறைய இடம் கிடக்கும் , அதுல மீன் கொண்டு போறவங்க பாதிரம் வைப்பாங்க . அதுல தான் நானும் அருள்தாஸ் (மேலத்துரை ),கொட்வின் ,எல்வின் எல்லாரும் நின்னு போவோம் . எங்க பஸ் உள்ள பின் சீட் ரெம்ப விசேசம் அதும் ஜன்னல் சீட் பெரும்பாலும் மதன் அண்ணன்தான் இருப்பாங்க , அப்புறம் அஜித் (கோவளம் ) அந்த சீட்ல இருந்துட்டு ஈயா ........ அப்படின்னு சத்தம் போடறதுனால அவர கொஞ்ச நாள் அப்பிடியே கூபிட்டோம் . ராதாகிருஷ்ணன் , ராமையா ரெண்டு பெரும் பெர்மநேண்டா டிரைவரா இர்ருந்ததால அவங்களுக்கும் சந்திரன் , மணி கண்டக்டர்க்கும் எங்க வீடுகள்ல ஏதாவது விசேஷம் வந்தா கார்டு குடுப்பாங்க அவங்களும் வருவாங்க . அந்த பஸ் நான் காலேஜ் தேர்டு இயர் படிக்கும் வரகும் ஒடிச்சு . அப்பிரம் அத மாத்திட்டு புது பஸ்ஸ ரெண்டு வாசல் பஸ் விட்டாங்க . கொஞ்ச நாள் பட பட-நு சௌண்டோட ஓடினாலும் அந்த நாலு வாசல் பஸ்ஸ மரகமுடியல . அந்த பஸ் உள்ள நாள் ஸ்கூல் படிக்கும் பொது கூட்டத்துக்குள்ள நல்லா இடித்து ஏறுவேன்னு எங்க பெரியப்பா சொல்லும்போது எனக்கு நாலு வாசல் பஸ் நினைவு வந்து போகும் . நாடு வண்டியில பாம்பா கிடக்கு நு மொட்டை கண்டக்டர் அடிக்கிற கமெண்ட் ரெம்ப்ப பாமௌஸ் . நான் மட்டும் இல்ல எங்க ஊருல உள்ள எல்லாரோட நெருகுன ஒண்ணா இருந்த அந்த பஸ் நம்மளோட ஊரு அடையாளங்களில் ஒன்னு .

வழி தடம் எண் 39 - தொடர்ச்சி

39 ஐ பற்றி நினைக்கும் பொது, அதை காதல் வாகனம் என்று அழைத்தும் , எழிலன் எழுதிய கந்தஹ கிடங்கு கவிதையும் , ஆலங்கொட்டை டிஸ்கோ - அவளை டாவடிக்க துடிக்கும் அப்போதைய நம்ம ஊரு ஹீரோ களும் , நம்ம அழிகால் பொண்ண இடிச்சதுக்காக , அழிகால் உடன்பிறப்புகளோடு சேர்ந்து கணபதிபுரத்து காரங்களை அடிச்சதும் , அந்த விஷயத்துல ராதாகிருஷ்ணன் டிரைவர், சாதிய(Caste) பாக்காம நமக்கு சப்போர்ட் பண்ணினதும் ...!!!! இன்னும் எத்தனை எத்தனையோ, நிகழ்வுகள் ,நினைவுகளாக ...!!!! 1982- கார்மேல்இல் , ஆறாம் கிளாஸ் முதல் , (வண்டில ஏறுனதும் சென்பகபெருமல் வாத்தியாரை நினைத்து வயிறு கலங்கும் அப்புறம் வளர வளர பயம் விட்டு போனது ). பல தடவை பஸ் டே கொண்டாட முயற்சிகள் நடந்ததுண்டு . ஆனால் ஓரிரு முறை மட்டுமே சாத்தியமானதாக நியாபகம் . சக பேருந்து கள்ளில் கொண்டாடும்போது , நம் இகலாமையை நினைத்து வருதபடுவத தவிர வேறொன்றும் செய்ய முடிவதில்லை. 1992 -இல் ஸ்காட் -இல் , BSc முடித்தவரை , என் அனுதின வாழ்வின் ஒரு அங்கமாக , உணர்வுகளோடு கலந்த 39…..!!!!

உள்ளத்தில் எத்தனை உணர்வுகள் இருந்தும் , இன்றைக்கு நிலைமையில் நான் (பெரும்பாலும் நம் நண்பர்களும் ) அதன் உபயோகிப்பதாக இல்லை . காரணம் பல உண்டு . நான் ஏறாத காரணம் - பஸ்ல ஏறுனா , எல்ல்லாம் தெரியாத முகங்கள் . ஒரு அந்நியனை போல நம்ம்மை பார்பதாக ஒரு எண்ணம்.

இந்த நியாபகங்களை , எழுதுவடதற்கு , தூண்டுதலாக இருந்த அசோகக் , மிக்க நன்றி

ஞாயிறு, 19 ஜூலை, 2009

வழி தடம் எண் 39



வழி தடம் எண் 39 எங்க ஊர் பேருந்து, இதுதான் எங்க ஊர்மக்கள் எல்லாரும் வெளிஊருக்கு போயிட்டு வர உதவியாக இருக்கும். நாகர்கோயில்ல இருந்து பிள்ளைதோப்பு வரை தினமும் ஒரு பத்து வாட்டி வந்து போகும். எல்லா மக்களுக்கும் ஒரு வகைல இது ரொம்ப உதவியாக இருக்கும்

எங்க ஊர்ல உள்ள நண்பர்கள் எல்லாரும் வேறு வேறு பள்ளிகூடங்கள்ள படிச்சாலும் ஒரே நேரத்ல இந்த பஸ்லதான் போயிட்டு வருவோம். காலேலஎட்டு மணிக்கு உள்ள ட்ரிப் அது எங்களோட ட்ரிப் யாரையும் மதிக்காம சத்தம் போட்டிட்டு அரட்டை அடித்தபடியே பள்ளிக்கூடம் போவோம்.

சில நேரங்களில் பக்கத்து ஊர் பசங்க கூட சண்டை கூட போடுவோம். எல்லாம் பொண்ணுங்க விஷயத்த்லத்தான். பக்கத்து ஊர் பசங்கள பஸ்ல ஏற விடாம படிக்கட்லே நிப்போம். கண்டக்டர் எதாச்சும் சொன்னா அவருக்கு திட்டு அடி. அதனால அவரும் ஒன்னும் சொல்லமாட்டார்.

இப்பல்லாம் யாரும் அதிகமா பஸ்ல போறதா தெரியல்ல...

புதன், 15 ஜூலை, 2009

சண்டே ஸ்பெஷல்



சண்டே அப்படின்னா எனக்கு நினைவுக்கு வர்றது நாம சந்திக்கும் தினம். ஊர்ல எல்லாரும் கோவிலுக்கு பூசைகோ இல்லன்ன ஜெபம் பண்ணவோ போவாங்க ஆனா நாம மாற்ற நண்பர்கள சந்திக்க போவோம்.

சண்டே காலேல நேரத்தே முழிச்சு ஆத்துல பொய் குளிச்சுட்டு கோவிலுக்கு போனா அங்க எல்லா நண்பர்களையும் பார்க்கலாம். அபடியே கோவில் பக்கத்ல இருக்கிற மேடைல வரிசையா இருந்து வர்ற பெருசுகள நக்கல் அடிசுட்டிம், சைட் அடுசுட்டும் நேரம் போகுறது.

சில பெருசுங்க இத நோட்டம் போட்டிட்டு நம்ம எல்லாரயயும் அங்க இருந்து துரத்தி அடிச்சிருவாங்க. நாம அப்படியே அவங்கள ஒரு லுக் விட்டபடியே பக்கத்ல இருக்கிற மையாகுளில பொய் நாம வேலைய ஆரம்பிச்சுருவோம்......

திங்கள், 13 ஜூலை, 2009

சுருட்டு


நம்ம ஊர்ல சுருட்டு குடிக்கிற ஆளு குறைவுதான். ரபெல் பிள்ளை, அந்தோனியார் (அசோக் சித்தப்பா),பிரான்சிஸ் வாத்தியார், அழிக்கால் ராயப்பன் பிள்ளை இவர்கள் எல்லாம் சுருட்டு குடிகிரதுல முக்கியமான ஆட்கள். அப்புறம் ரூபன் வீட்டுக்கு பின்னாடி ஒரு பொம்பள சுருட்டு குடிபாங்கன்னு கேடிருகேன்.
கருப்பா இல்ல பிரவுன் கலரன்னு கூட தெரியதா இத எப்படிதான் குடிகிரான்களோ தெரியல்ல. அதை இழுத்து அவங்க விடுற புகை வீட்டை நிரப்பிடும். கிரிக்கெட் பாக்க வர்ற ரபெல் பிள்ளை விடுற புகைய பாத்து ஜெகன் விடுற கமெண்ட் ரொம்ப நல்லாவே இருக்கும். பதிலுக்கு அவர் விடும் நக்கலும் ஜடேஜா பற்றிய வாக்குவாதமும் கேட்டபடியே எங்கள் நேரம் போகும். ஆனா என்னனு தெரியல அடுத்து வந்த யாரும் சுருட்டு பிடிகல்ல...
சுருட்டு சுருண்டு போனதுன்னு சொல்லலாம்......

யாரும் விளையாடும் தோட்டம்.


யாரும் விளையாடும் தோட்டம் அப்படின்னு எழுதினாலும் நாங்க விளையாட தோட்டம் தந்தவர் பஞ்சியார் தான். பஞ்சியார் அழுக்கு கொஞ்சம் உள்ள வேஷ்டி மட்டும் தான் போடிருபார். எப்பவாச்சும் ஒரு கட்டம் போட்ட சட்டை போடுவாரு அன்றைக்கு எதாவது கல்யாணமோ இல்லன்ன ராஜாக்கமங்கலம் டாக்டர்ஐ பார்க்க போவார். அந்த டாக்டர் விளைதான் அவர் பல வருஷமா கவனிச்சிக்கிட்டு வர்றார்.
பள்ளிக்கூடம் பின்னாடி இருக்கும் டாக்டர் தொப்புல தான் நாங்க கிரிக்கெட் விளையாடுவோம். விளை பூரா தென்னை மரமும் வாழை மரமும் உண்டு. புதுசா வாழை கண்ணு வச்சிருந்தா மட்டும் விளயடும்போது சத்தம் போடுவார்.
பவுல் அடிக்கிற சாட்டும், அசோக் ஜெகன் நின் பௌலிங் அப்புறம் சுமல்டின் கடைசி ஓவர் த்ரில்லிங்கும் மறக்க கூடிய விஷியம் இல்ல .........

திங்கள், 6 ஜூலை, 2009

முகவுரை

முகவுரை:

அனைத்து பிள்ளைதோப்பு நண்பர்களுக்கும் வணக்கம்.

நம் கனவுகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை வரை நாம் அடைவதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளோம். இவை அனைத்திற்கும் நம் நண்பர்கள் தான் காரணம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

சுரேஷ் அண்ணன் நம் ஊரில் நாம் இருக்கும் பொழுது நடந்த சில சம்பவங்கள் அல்லது நம் ஊரைப்பற்றி நம்முடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பக வெளியிட்டால் என்ன என்று என்னிடம் கேட்டர்கள்.

நல்ல ஒரு சிந்தனை. அதன் பின் மேற்கொண்ட முயற்சியில் உருவானதுதான் இது.

நம் நண்பர்களில் நல்ல கவிஞர்கள், சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் உதவியுடன் இந்த வரயுரையை தொடர்வோம்.

நண்பர்களே உங்கள் மனதில் உள்ள அனைதயயும் நமது யாஹூ குரூப்இல எழுதுங்கள். அதை தமிழில் மொழி பெயர்த்து நான் இங்கே வெளியிடுஹிரேன்.

சிறிது நாட்கள் கழித்து எவ்வாறு தமிழில் எழுதுவது என்று விவரிக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் நண்பன்
அசோக்.