திங்கள், 26 அக்டோபர், 2009

சுவர்....!!!!!! - 1

இதயன் குட்டி சுவர் பற்றி எழுதியது மிக சிறப்பு. இதைப்பற்றி சிந்தித்தால் பல இனிமையான நினைவுகள் வருகிறது. எல்லாவற்றையும் இங்கே பதிக்க முடியவிட்டாலும் எனக்கு ஓர்மையில்(இப்படிப்பட்ட வார்த்தைகளை இங்கு மட்டுமே உபயயொகிக்க முடியும்) வரும் சில விஷயங்களை பதிக்க முயல்கிறேன்.

மாப்பிள்ளை கடை...!!!!
இந்த வார்த்தை நம்மில் பலருக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ( எண்பத்து ஒன்பது முதல் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு வரை) நியாயிற்றுக்கிழமைகளில் நானோபதேசம் படிக்க பொகும் பெண்களை கவர் பண்ணுவதற்காக வரிசையாக இந்த சுவற்றில் அமர்வது வழக்கம். பல பெண்களை சிலர் (நாம்) ரெகுலர் சைட் சீயிங் செய்வதும் உண்டு!. (சில சமயங்களில் ரெஸ்பாண்ஸ் பயங்கரமாக இருக்கும், பல காரணங்களுக்காக.... பெயர்கள் மறந்து விட்டன....!!!)
அப்படி ஒரு நாள் இனிமயான மாலை!!!!. ஒரு பெண் நம்மை பார்த்து, "மாப்பிள்ளை கடை வச்சிறிக்கி" என்று டயலாக் விட்டாள். அவ்வளவு தான்!!! கொதித்து எழுந்தான் எழிலன். எங்க வீட்டுல நாங்க இருப்போம், அதை எப்படி கிண்டல் பண்ணுரா பருங்க! கொஞ்ச நேரம் சவுண்டு உட்ட பிறகு தான் சொன்னான், "நம்ம முந்திக்கிட்டதுனால தப்புனோம். இல்லாட்டி பிரச்சனை நம்ம மேல திரும்பியிருக்கும்!!!!!"
என்ன ஒரு அட்வான்ஸ்டு திங்க்கிங்!!!!!


1 கருத்து:

  1. அண்ணா எனக்கு இந்த சம்பவம் நியபகம் இருக்கு.. அதைச் சோன்ன ஆளும் நியாபகம் இருக்கு.. ஹா ஹா...;)

    பதிலளிநீக்கு