வாசகர்களே இந்த வலைப்பதிவு மூலம் எங்கள் ஊரில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் மற்றும் எங்கள் ஊரை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
Besanio
நீண்ட நாளுக்கு பின் மீண்டும் உங்களோடு கை குலுக்குவதில் மகிழ்வு
விவேக் தம்பி உங்களை மிகுந்த அன்புடன் நம் வலைபதிவுக்குள் வரவேற்கிறேன்
என் பள்ளி தோழன் ஜுலியன்க்கு மிகவும் பிடித்தமான விவேக் ..... விவேக்
எனக்கு என் பள்ளி நாள்களில் மதிய சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டு வந்து தந்ததுண்டு ... நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது செய்வது , இன்னும் பிற கதைகள் வரும் நாள்களில் .........
புதிய இடம் புதிய கம்பெனி எனவே கடினமான வேலை பளு ......
இனி வரும் நாள்களில் நாம் தொடர்ந்து சந்திப்போம்
நன்றி
புதன், 26 மே, 2010
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
இதயன் தாவு
இதயனுக்கும் கடலுக்கும் நீண்ட தொடர்பு உண்டு.அவன் ஒவ்வொரு முறை கடல்
குளிக்கும் பொதும். கடலுக்கு பிடிப்பதில்லை.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொது
அனைவரும் கடல் குளிப்பது வழக்கமானது.ஒருமுறை எல்லாரும் கடல் குளிக்கும் பொது அவன் மட்டும்
கடற்கரையில் படுத்து இருந்தான்.என்னா இதயா நீ குளிக்கவில்லையா? என்று கேட்டதர்க்கு
சும்மா சன் பாத் எடுக்கிறேன் என்றான்.இவனாவது சன் பாத் எடுப்பதாவாது அதன் பிற்குதான் தெரிந்தது அலையில் மாட்டி வாய் மற்றும்
மூக்கு முழுவதும் மண்ணாக இறுந்தது.
அடுத்த கிறிஸ்துமஸ் வந்தது எல்லாரும் வழக்கம் பொல கடல் குளிக்க சென்றெம்.அனைவரும் ஆழமான பகுதிக்கு
சென்றபொது இரண்டு கை மட்டும் மேலெ தெரிந்தது.நொடியில் புரிந்தது இது இதயனாகத்தான் இருக்கும்.நான் மற்றும் அஷொக்
அவனை நே க்கி நீந்தினொம்.அவன் என் கழுத்தை பிடித்து தண்ணீரில் அமுக்கினான்.என்க்கு மூச்சு முட்ட அவனை முழு பலத்தையும்
திரட்டி தூக்கி வீசினேன்.நல்ல வேளை பக்கத்தில் மேடான பகுதி இருந்தது.அதில் பொய் விழுந்தான். அதிலிருந்து அந்த ஆழ்மான்
பகுதிக்கு இதயன் தாவு என்று பெயர் வந்தது.அதிலிருந்து அந்தபகுதி மிகவும் பிரபலம்.இதயனை இனி கடல் குளிக்க வரக்குடாது என்று வற்புர்த்துவதுண்டு
ஆனாலும்அவன் அவனுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதில்லை.
இம்முறை 2004,டிசம்பர் 25 சுனாமிக்கு முந்தைய நாள்.கடல் குளிக்க நண்பர்கள் அதிகம் இருந்தனர்.
சுந்தர் மற்றும் ஜெகன் நண்பர்கள் நாகர்கொவிலில் இருந்து வந்திருந்தனர்.கடல் குளித்துக்கொண்டிருக்கும் பொது
இதயனின் கிளாஸ்மெட், கடியப்பட்டணத்தில் இருந்து வள்ளத்தில் அலையய் கிழித்துக்கொண்டு வந்திறின்கினான்.நண்பர்கள் அனைவருக்கும்
வள்ளத்தில் செல்ல ஆர்வம் அனைவரும் அதில் ஏர வள்ளம் புரப்பட்டது.தீடிரென ராட்சச அலை வர நிலைமையை புரிந்து கொண்டு
நான் மற்றும் ஜெகன் கடலில் குதித்து விட்டாம்.அலை வள்ளத்தை தலை கீழாக கவிழ்த்தது.வள்ளத்திற்குள் இதயன்,சுந்தர்,ஜாண்சன் அண்ண்ன்
மாட்டிக்கொண்டனர்.அவர்களை மீட்டு எடுத்தது தனிக்கதை.அடுத்த நாள் சுனாமி வந்ததால் இந்நிகழ்ச்சியை அனைவரும் மறந்து விட்டனர்.
இவ்வளவு நடந்தபிரகும் அவன் கிறிஸ்துமஸ் பண்டிகை கடல் குளிப்பை நிறுத்தவில்லை.
அவன் தைரியத்திர்க்கும் சுயமரியாதைக்கும் என்னுடய வாழ்த்துக்கள்
ஜுலியன்
திங்கள், 19 ஏப்ரல், 2010
வாரவறண்டோ தொடர்ச்சி
இன்னமும் அதைப்பற்றி நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் இது போல் ஏராளமா விளையாட்டுகள் இருக்கு. எனக்கு நினைவுக்கு வருவது நம்ம பெரிய ஜூலியன் கலக்கிய களச்சி விளையாட்டு தான். அவனூட நீளமான விரல வச்சு டப்பா டப்பாவா களச்சி சேர்த்து வச்சிருப்பான்
நாம் கொண்டு போன களச்சி எல்லாம் பறிகொடுத்துட்டு இன்னுமும் விளையாட வேண்டும்னா அவன் கிட்ட பைசா கொடுத்து களச்சி வாங்கணும் அப்பத்தான் நாமள விளையாட செதுகுவான்
என்ன கொடும சார் இது .....
கோபி - வார வரன்டொ - சுமல்ட்
இந்த விழையாட்ட சொன்னதும் எனக்கு ஞாபகம் வருவது "கோபி" இவர் நம்ம நியூட்டன் தம்பி ,நிஜமாக இவர் ரொம்ப பிரபலம் இவர் ரொம்ப ரெகார்ட் எல்லாம் வச்சிருந்தார்
1 அதிகமா வர்மதுக்கு மருந்து சாப்பிட்டது
2 அதிக அனிமல்ஸ கசாயதுக்கு பயன்படுத்தியது
3 அதிக முறை மரத்தில் இருந்து விழுந்து கை உடைந்தவர் .
எனக்கு இவர பத்தி நினைத்தும் ஞாபகம் வருவது வாரவரண்டோ விழையாடும் போது இவரு மரத்துல ஏறி ஒழிஞ்சிக்கிட்டு இருந்தாரு தலைவரு . இவர தேடும்போது மரத்துல இருந்து கீழ விழுந்து கை ஒடிஞ்சி ஒரு செங்கல்லையும் கை ல கேட்டிகிட்டே அங்க இங்கன்னு ஆட்டிட்டு இருந்தார் அத இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது............
Next சோவி அரிச்ச வளையம் செய்ய , வராச்சி மர கம்பு வெட்ட மரத்துல ஏறி கால் தவறி கீழ விழுந்துட்டு கண்ணாடி பாட்டி மரத்துல இருந்து விழுந்திட்டு சேசாரு புள்ள காம்பௌண்ட்ல உள்ள வாத அடிசிதுன்னு பீதிய கிழப்புனாரு..........
எறி பந்த பத்தி யாராவது எழுதுங்க
நான் ஆவலோடு எதிர் பார்ப்பது
இதயன் தாவு
இதை பற்றி ஜூலியன் அண்ணா, அசோக் அண்ணா எழுதுங்க.........
சுமல்ட் --
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
வார் varnட
அன்பர்கழெ வனக்கம்.சிறிய வயதில் விழையாடிய வார வராண்டா விழையாட்டு பற்றி மறந்தவர்கழ் யாரும் இருக்கமுடியாது.
நான், ஜொசெப்ஹ், பெரிய ஜுலியன்,மதன்,எழிலன்,அஷொக்.மற்றும் நன்பர்கழ் கிறிஸ்துமஸ் மற்றும் பெர்ரிய லீவில் பிரம்மாண்ட்மாய் விழையடுவதுண்டு.
வார வாரண்டாவில் மிகவும் பிரசித்தமானது, கசாப்பு தீட்டுவது.
அடிக்கடி எழிலன்,பெரிய ஜுலியனுகு கசாப்பு தீட்டுவது சகஜம்.
புனிதனுக்கு கசாப்பு தீட்டப்பட்டபொது வீட்டில் கஞ்ஜி குடித்துக்கொண்ட்டெ வார வாராண்டெ வார வாராண்ட்ட சுந்தர் என்ரு சொன்னது இன்று வரை பிரபலம்.
நன்பர்கெழ இது வாரா வாராண்டா மாதம்.
இன்று இந்த விழையாட்டு அழிந்து விட்டது.
நன்பர்கழெ வாரா வாராண்டா விழையாட விரைவாக ஊருக்கு விரைந்து வாருன்கழ்.
ஜுலியன்
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
ஊருக்கு இரு நாள் பயணம்
இரு நாட்கள் ஊரில் இருக்கிறேன். ஜெஹன் , ஜூலியன் இங்கு விடுமுறையில் இருக்கின்றனர்.
சுரேஷ்
திங்கள், 22 மார்ச், 2010
சுமல்ட் - பறவைகள் பலவிதம் - தொடர்ச்சி .....
ஆந்தை
நம்ம ஊர்ல ஆந்தைகள் இரவு நேரம் வந்து சத்தம் போட்டால் அதை விரட்ட ஒரு கூட்டமே வரும். அதில் கவனிக்க வேண்டிய விஷயம் அது சத்தம் போடும்போது குள்ளந்தைகள் அழுதால் அந்த குரலை அது பிடித்து விடும் என்று ஏதோ சொல்வார்கள் அது எனனக்கு சரியாக தெரிய வில்லை அதை விரட்ட செரட்டை சகிதமாக சவுண்ட் போட்டு நானும் ஆந்தையை விரட்டியிருகேன் . இப்போ நான் அந்த பரவைய பார்த்து பல வருஷம் ஆச்சு. கடைசியா என்னோட கம்பெனியில களேரிஞ்சு ஒண்ண அடிச்சேன் மனசு கஷ்டமா இருந்திச்சு .. ..
அனா எனக்கு FAVOURITE நம்ம ஊர்குருவி அது பேர் என்னக்கு தெரியாது அனா அது பெயர் குருவி அவ்வளவுதான் .
அந்த குருவி நல்ல நெத்தலி மீன் சீசொன்ல கருவாட்ட மொய்க்கிற ஈச்ச்சிய பிடிக்க வரும் அத பிடிக்க வலை சகிதமாக நாங்க போவோம் . இதில் மெயின் பார்ட்டிகள் நம் பக்கத்து ஊரு நண்பர்கள் தான் அனால் நம்ம ஊரு பேமஸ் சூக்கை ராஜன் ,ஒட்டி எனப்படும் அன்டோ , மற்றும் செல்வம் & கோ , ஏன்னா இவங்க கிட்டத்தான் வலை உண்டு . இவங்க பின்னாடி ஒரு சின்ன பசங்க படையே போகும் அப்புறம் இரண்டு பக்கம் ஆள் இருந்து குருவி வலைக்கு மேலாக மிக தாழ்வாக கிராஸ் ஆகும் பொது அப்படியே வளைய சுழற்றி ஒரு அடி அவ்வளவுதான்...... குருவி நம்ம கைல ...!!! இதில் சில தப்பிடும் மேலும் சில கிட்ட போயி எடுக்க போகும் பொது குருவியை அருப்பாணுவ(கெட்ட வார்த்தையில் திட்டுவாணுவ) பாருங்க ....!!!! கேட்க முடியாது நமக்கு ...... ........
NEXT
கிளிய கூண்டில் அடச்சு ரொம்ப சீன போட்ட மதன் அண்ணன்
அது அவுங்க வூடு ஜோசிய கிளின்னு நினைக்கிறேன் அத வச்சு காட்ன லொள்ளு இருக்கே அட ... அட ............!!!!!!
NEXT
கிளி , மைனா , வேட்டையர்கள் ஜார்ஜ் ,ஜோன்லி , அசோக் அண்ணா ! நீங்க உண்டா ....!!!!????.,
இந்த பட்ட மரத்தில் பொந்தில கை விட்டு பாம்புன்னு ஓட்டம் போட்டது !!!!!!.... ......... ....?
NEXT
நம்ம ஊரு வெட்னரி டாக்டர்ஸ்
சர்ஜன் ஜோசப் அண்ணன் , அணில் கில்லெர் பெரிய ஜூலியன் அண்ணன் ,
NURSES ...சின்ன பயக்க நாங்க ...... ..!!!!
தொடரும் .... .........
எண்ணமும் எழுத்தும் : சிந்தனை செல்வன் சுமல்ட்
பறவைகள் பலவிதம்......!!!!!!!!!
நம்ம ஊருல சிட்டு குருவி , மைனா, மரங்கொத்தி , கொக்கு மற்றும் நெய்தல் நிலத்தின் தனி சிறப்பான பறவை புல்லு குஞ்சு ( இதன் இயற்பெயர் தெரியவில்லை) மற்றும் பல பறவைகளை நாம் ரசித்திருக்கிறோம்.
சில சமயங்களில் எங்க வீட்டு சிவப்பு கலர் தலை வாசல் படியில் உட்கார்ந்து , கரண்ட லைனில் இருந்து தலையை அழகாக சாய்க்கும் காக்கையை கூட ரசித்ததுண்டு. ஒரு சிறு உணவு துண்டு கிடைத்தாலும் தன இனத்தையே கூவி கரைந்து அழைக்கும் அதன் சிறந்த குணாதிசயத்தை பிரமிப்புடன் பார்த்ததுண்டு.
கூட விளையாட நண்பர்கள் இல்லையென்றாலோ , அல்லது இருக்கும் நண்பர்களிடம் ட்டூ விட்டிருந்தாலோ , தெக்கெ உட்கார்ந்து கடலுல ஊரப்போட்டிருக்கும் மரத்துக்கு மேலெ வரிச புடிச்சு இருக்குறே புல்லுகுஞ்சுகளை பார்க்கவே ஒரு ரம்மியமா இருக்கும்.
தென்னை மரங்கள்ல வளந்திருக்கிற ஒருவிதமான காளான் போன்ற செடியை திங்க வருகிற மரங்கொத்தி .... பற்பல நிறங்களில் அதன் உடலும் , கொண்டையும்... அலகும்.....அது எழுப்பும் ஒரு தனித்துவமான சத்தமும் ....அதை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெர்ல
காலேலே ஒரு ஆறு அரை மணிபோல , சப்பாட்டுமேசயில இருந்து காப்பி குடிக்கும்போது விளையில சுத்தித்திரியுற மைனாக்க நம்ம கண்ணுல படும். அதுக போடுற சத்தத்தை கேட்டுகிட்டே கருப்பட்டி காப்பி குடிக்கிற சுகமே தனி தான். இப்போ , மைனாவும் இல்ல ! கருப்பட்டி காப்பியும் இல்ல.
ஓடையில குளிக்க போகும்போது , வயல்களிலும் , நம்ம சின்ன ஓடை எனப்படும் தாரையிலும் நிற்கும் வெள்ளை கலர் கொக்கும் அது போடும் வித்தியாசமான சத்தமும் ... எப்படி சொல்ல ....
எனக்கு தெரிஞ்சதை இங்கெ எழுதிட்டேன் . இதயன் , சுமல்ட் , எட்மன்ட் , அஷோக்,எழிலன் , பால் ..... பரவைகளைப்ப்றி உங்கள் நினைவுகளை பதிக்கவும்..........
==============================================================
அன்பர்களே! பின்வரும் கட்டுரை நம்மில் பலருக்கு அறிமுகமான எனது நெருங்கிய நண்பர் வெள்ளிச்சந்தை முகம்மது அன்சார் எனக்கு அனுப்பினார். என்னுள் பழைய நினைவுகளை அசைபோடவைத்த அக்கட்டுரையை கீழே பதிக்கிறேன்.
=================================================================
இன்று உலக சிட்டுக்குருவி தினம் : நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள் 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை. உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம். அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. * வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், 'ஏசி' செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. * பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. * பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. * வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன. * இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரெல்டன் கூறினார். மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது: மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார். குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
இணையத்தள செய்தி
நமது நண்பர்களின் திருமண புகைப்படங்கள் அனைத்தும் நம் இணையத்தளத்தில் சேர்கபடுள்ளது.
http://www.pillaithoppu.org/index-12.html
இப்படிக்கு
அசோக்