திங்கள், 17 ஆகஸ்ட், 2009

திரைபடம்

திரைபடம் எங்க உஒர்ல என்ன நடத்தலும் படம் தான் திருமணம் திருவிழா நாளும் படம் தான் ஒரு தட வா muttom தள படம் பாக்க நான் அசோக் எத்யன் ஜெகன் எல்லாரும் போனோம் திருப் வரும்போது எட்மண்ட் அண்ணன் வீடுகு பின்னடி நாங்க சத்தம் போட எட்மண்ட் அண்ணன் எங்க எல்லரைரும் வேறடா எல்லாரும் சுத்தி சுத்தி ஓட கடசிய எங்கள பார்க்க அப்புறம் எட்மண்ட் அண்ணன் எல்ல நீகள சொல அசோக் எத்யன் ஜாபகம் இருக்கும் இந்த மாத்ரி ஐடியா அசோக் ஜெகன் நல்ல வரும் எதுலம் மறக்க முடியாது

வாழ்தூகள்
பால்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

பறை (டும்!!!!! டும்!!!!! டும்!!!!!)

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றல் .....

நம்ம சின்ன ஜுலியன் வருகிற "18" ஆம் தேதி நம்ம ஊருக்கு வர்றார். அதனால் ஊர்ல இருகிறவங்கள் "18" ஆம் தேதிக்கு அப்புறம் அவர ஊர்ல சந்திக்கலாம்...!!! (டும்!!!! டும்!!!! டும்!!!!!).....

அதேபோல நாம பெரிய ஜுலியன் "Saudi" ல இருந்து இந்த மாதம் "20" ஆம் தேதி ஊருக்கு வர்றார்..... (டும்!!!! டும்!!!! டும்!!!!!)






ஜெயதாஸ் ஓடு !!! ஜான்சன் ஓடு !!!

நண்பர்களே இந்த தலைப்பை கேட்டதும் சிலருக்கு கண்டிப்பாக அந்த சம்பவம் ஞாபகம் வந்திருக்கும்.

முன்பெல்லாம் பஞ்சியர் அவர் தோப்பில் உள்ள வேலியில் கிழங்கு நட்டு வைத்திருப்பார், சம்பவம் நடந்த அன்று நமது நண்பர்கள் சிலர் திட்டமிட படி ஒரு சாக்கு மூடை எடுத்துக்கொண்டு பஞ்சியார் தோப்புக்கு சென்று அங்கு நட்டு வைத்திருந்த கிழங்கு அனைத்தையும் பிடுங்கி மூடைஇல் அடைத்துவிட்டு அவர் தொபில் இருக்கும் பெரிய கிணற்றில் உள்ள மீன்களை பிடித்து கொண்டுஇருந்தர்கள் அச்சமயத்தில் பஞ்சியார் தோப்ப்பிர்க்குள் இருக்கும் இவர்களை பார்த்து ஓடிவர இவர்கள் அனைவரும் மூடைகளை தூகிகொண்டு கூட்டத்தில் இல்லாதவர்கள் பெயர்களை சொல்லி (ஜெயதாஸ் ஓடு, ஜான்சன் ஓடு ....) என்று கூவிக்கொண்டே ஓடிவிட்டார்கள்.
பஞ்சியாரின் காதில் விழுந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள் அன்றைய பலிகடா ஆகிவிட்டார்கள்...

ஞாபக படுத்யவர்
அசோக்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

மூந்தங்கிணறு

பொதுவாக திருநெல்வேலிக்காரர்கள் மற்றும் சுத்துவட்டாரத்தினர் " நான் தாமிரபரணி தண்ணியை குடித்து வளந்தன்" என்று டயலாக் விடுவது தென் மாவட்டங்களின் மறபு. நடிகர் விக்ரம் கூட ஒரு படத்தில், கோயமுத்தூர் காரராக நடிக்கும்போது, நெல்லையிலிருந்து வரும் வில்லன் நடிகரைப்பார்த்து நீ தாமிரபரணி தண்ணியை குடிச்சவன்னா , நான் சிறுவாணி தண்ணியை குடிச்சவன்னு ஒரு டயலாக் உடுவார். இதுவே நம்ம ஊர்க்கரனா இருந்தா என்ன சொல்லியிருப்பான்... நினைத்தால் சிரிப்புத்தான் வரும் " நான் மூந்தங்கிணத்துத் தண்ணியை குடித்து வளந்தவன்."

எப்படி நகர்கோவில்,நெல்லை,தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவ நதியாக உள்ளதோ அதுபோல நம்ம பிள்ளைதோப்பு,அழிக்கால்,மேலத்துறை மூன்ற்று ஊருக்கும் வற்றாத ஜீவகிணறு நம்ம பக்கத்து கிராமமான கன்னக்குறிச்சியிலிருக்க்ற மூந்தங்கிணறு தான். முற்காலத்தில் ஒரு வீட்டுக்கு ஓரிரு குடங்கள் தினந்தோறும் தண்ணி சுமந்து தான் கொண்டு வருவார்கள். தோராயமாக 2அல்லது 3கீமீ தூரம் இருக்குமென்று நினைக்கிறேன். பின்பு நான் சிறுவனாக இருக்கும்போது, டேங்க் கட்டி பைப் லைன் போடப்பட்டது. மக்கள் அப்பாடாவென்று பெருமூச்சு விட்ட நேரம், ஒரு பகுதி மக்கள் அவர்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று முறையிட்டார்கள். முறயீட்டை சம்பந்தப்பட்டவர்கள் காது கொடுக்காததால், இந்த செட் அப் வெட்டி எறியப்பட்டது. மீண்டும் தண்ணீர் சுமக்கும்படலம் சில வருடங்களுக்கு தொடர்ந்தது.

இந்த தண்ணியை குடித்தால் அது ஒரு தனி சுவைதான். கிணற்று தண்ணியென்றே சொல்ல முடியாது. இதை குடித்து பழகிவிட்டு, வெளியூர்களுக்கு செல்லும்போது அங்குள்ள தண்ணீர் எதோ ரொம்ப கசந்தது மாதிரி ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. நம்மில் பலர் இந்த தண்ணீரை விரும்பிகுடித்தவர்களே!!. சென்னையில் சில மாதங்கள் வேலை பார்த்த போது கூட, தண்ணீர் தகம் அடங்கவே செய்யாது. எப்பொண்டா நம்ம ஊரு தண்ணி குடிக்கமுடியுமுன்னு தோணும். ஆன இப்போ நம்ம ஊரு பைப்புல வர்ற தண்ணி அந்த அளவுக்கு இல்ல. போன வாரம் ஊரில் இருந்தப்பொ அம்மாகிட்ட கேட்டேன். அப்போதான் தெரிஞ்சுது, அது மூந்தன்கிணத்து தண்ணி இல்லண்ணு. கல்லுக்கட்டியிலிருக்கிர வேறு எதோ ஒரு கிணற்றிலிருந்து இப்போ தண்ணி வருதாம். நம்ம ஊர்ல மறிப்போன அல்லது நம்ம இழந்து போன பல விஷயங்கள்ள அதுவும் ஒண்ணாயிற்று.

"பத்தோட பதினொண்ணு! அத்தோட இதுவும் ஒண்ணு"

சனி, 1 ஆகஸ்ட், 2009

அனைவருக்கும் வணக்கம்
அனைவரும் நலமா அசோக் இது என் ஜுலியன் மாமா மெயில் முகவரி _அமம்ள@yஅதூ.கம அலைபெதில் அனுபும் தங்க உ
வணகதுடன்
பால்