சைக்கிள் எனக்கு ஒரு கனவு , என் சின்ன வயதில் என் அண்ணன்மார்கள் எல்லோரும் சைக்கிள் ஓட்ட தெரிந்து வைத்திருந்தார்கள். நான் சைக்கிள்படித்து +1விடுமுறை நாளில்தான் . நானும் ஜெகனும் சேர்த்து மேலதுரைகும் முட்டம் இடையிலான இடத்தில சைக்கிள் ஓட்ட சொல்லிகுடுதான். கல்லுக்கட்டி முக்குல இருந்த ஒரு கடைல இர்ருந்துதான் சைக்கிள் வாடகைக்கு எடுத்து என் அண்ணன்மார்கள் சைக்கிள் படித்து முடித்தார்கள். அரை வண்டி கால் வண்டி முழு வண்டி என வித விதமா உள்ள சைக்கிள் அவன் அவன் வளர்திக்கு எடுத்துக்குவாங்க.வண்டி ஓட்ட ஒரு கூட்டமே பின்னால ஓடும் . நானும் ஓடினதா எனக்கு நினைவு உண்டு. நம்மள எல்லாரும் ஓடிருப்போம் . சைக்கிள் வாங்கி ஓட்டனுமுன்னு என்னக்கு அதிக ஆசை, எங்க அப்பா டிவி வாங்க போனபோது எனக்கு சைக்கிள் வாங்கி வருவாங்கன்னு இறுந்தேன், ஆனா அது இல்லன்னு தெரிந்தபோ நான் டிவி இறக்கி வீட்டுக்கு கொண்டு போகல்ல . இது ஜூலியன் அண்ணனுக்கு நினைவு இர்ருகும்னு நம்புறேன். நானும் எபியும் சேர்ந்து கல்லுகட்டிகு லீவு நாள்களில் மோர் குடிக்க சைக்கிள் மிதிச்சு போவோம்.ஜெகன் வாங்குன சைக்கிள் அதிக நாள் நான் ஒட்டினதுண்டு.