வெள்ளி, 11 மார்ச், 2011

சிரு வயதில் தவக்காலம்.

நண்பர்களே,

சிரு வயதில் குரிப்பாக தவக்காலங்களில் நாம் செய்த சேட்டைகள் பற்றி உங்கள் நினைவில் இருப்பதை பகிற்ந்து கொள்ளுங்கள்.

என் நினைவிற்க்கு வந்தது.

பெரிய வெள்ளி அன்று நம் வீடுகளில் உளூந்து கஞ்சி வைப்பது வழக்கம். அது போல் அன்றும் எல்லா வீடுகளிலும் கஞ்சி தயாராக்கி வைத்து விட்டு எல்லாரும் கோவிலுக்கு பொய் விட்டனர். நாமும் கொவிலிக்கு பொய்விட்டோம். பூசை ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்த பிறகு. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம்.

அதாவது எதாவது ஒரு வீடில் உள்ள கஞ்சியை திருடி குடிப்பது. எல்லரும் இதற்க்கு ஒதுக்கொண்ட நிலையில். அன்று எஙகளுடன் கலந்து கொள்ளாத நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று அந்த கஞ்சி பானையை எடுத்து கடற்கரைக்கு கொண்டு சென்று விட்டோம்.

அந்த நேரதில் நாங்கள் கஞ்சி திருடிய வீட்டில் உள்ள நண்பன் எங்களுடன் வந்து சேர்ந்தான். அவனும் எஙளுடன் சேர்ந்து கஞ்சி குடித்தான். அனைவரும் பின் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து பேசிவிட்டு பின் வீட்டிற்கு சென்றோம்.

பின்னர்தான் அந்த நண்பனுக்கு தெரியும். நாம் திருடி குடித்தது நம்ம வீட்டு கஞ்சி என்று.

இந்த சம்பவம் நாம் பலமுறை நியாபகப்படுத்தி சிரிப்பது உண்டு.

புதன், 19 ஜனவரி, 2011

பால் திருமணம்


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

நான் நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன். ஊரில் இருந்த நாட்கள் நல்ல முரையில் களிக்க முடிந்தது. என்னுடன் ஜுலியன், ரூபன், பால், சுமல்ட், ராபி, ப்ரதீப், விவேக் ஆ கிய நண்பர்களும் ஊரில் இருந்ததால் நல்லா ஊர் சுத்தினோம்.

பால் திருமணம் நல்ல முறையில் நடந்தது திருமணத்துக்கு சென்ற போது எடுத புகைப்படம்.