வெள்ளி, 20 நவம்பர், 2009

இதயன் வைத்த பூசை

நண்பர்களே !!! நெடு நாட்களாக யாரும் சத்தம் போடாமல் இருக்கிறோம் .....!!!!!
நான் போன வாரம் ஒரு இளம் குருவைத்த பூசையில் பங்கெடுக்க நேர்ந்தது. அவர் பார்பதற்கு மிகவும் சிறுவன் போல் இருந்தார். பூசைநடக்கும் போதே எனக்கு இதயனின் ஞாபகம் வந்தது.

வெளியில் வந்து சிறிது நேரம் பழைய நினைவுகளை அசை போட்டேன்.

அவன் ஒரு போர்வையை பூசை உடுப்பைப்போல உடித்திக்கொண்டு வைக்கும் பூசையை ரசிப்பதே ஒரு நல்ல நேரப்போக்காக இருக்கும். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக...!!! மற்றும் சென்று வாருங்கள் பூசை முடிந்தது ஆகிய வசனங்களை அவன் உச்சரிக்கும் குரல் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

முக்கியமான விஷயம் என்னெவென்றால் , யாரும் சிரிக்காமல் இருக்க வேண்டும். சிரித்தால் அவ்வளவுதான். அவன் பூசையை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்து விடுவான்.

அவன் சிறுவனாக இருக்கும் போதே அவனை பார்த்து வலுத்த மண்டைக்காரன் என்று சொல்வதுண்டு. அதற்கேற்ப அவனும் சிறந்த கல்வி கற்று நல்ல நிலையில் இருப்பது நாமனைவருக்கும் மகிழ்ச்சியே